பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.. வெளியேறியதற்கான உண்மை காரணம் இதோ..! Description: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.. வெளியேறியதற்கான உண்மை காரணம் இதோ..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.. வெளியேறியதற்கான உண்மை காரணம் இதோ..!


பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.. வெளியேறியதற்கான உண்மை காரணம் இதோ..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறார் கவின். இப்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

முதல் இருசீசன்களைப் போலவே சற்றும் தொய்வில்லாமல் பிக்பாஸ் மூன்று மிகவும் உற்சாகமாக போய்க் கொண்டிருக்கிறது.துவக்கத்தில் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தற்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இதில் முகின் மட்டும் கோல்டன் டிக்கெட் பெற்று இறுதி சுற்றுக்கு நேரடியாக சென்றுள்ளார். அதைத்தவிர மற்ற ஐந்து வேட்பாளர்கள் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் தற்போது பஞ்சாயத்துக்களுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதிலும், கவின்_லாஸ்லியா காதல் விவகாரத்தைப் பார்த்து தமிழகமே ஐகொட்டி சிரிக்கிறது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற விருப்பமெனில் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு செல்லலாம் என டிமாண்ட் வைத்தார். பிக்பாஸில் இதற்கு முன்பு நடந்த இரு சீசன்களுக்கும் இதேபோல் பிக்பாஸ் ஆபர் வைத்திருந்தார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கவின் மட்டும் அந்த ஆபரை ஏற்றுக்கொண்டார்.

இதைப் பார்த்த சாண்டியும், லாஸ்லியாவும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் விஜய் டிவி இன்று வெளியிட்ட ப்ரமோவில் கவினிடம் இதுபற்றிக் கேட்கிறார் சாண்டி.அதற்கு கவின் பதில் சொல்லும்போது, ‘’ இவ்வளவு செஞ்சுட்டு மேடையில் எப்படி நிக்கமுடியும்? உன் கூட சரியா பேசியே எத்தனை நாளாச்சு? இன்னும் பத்துநாளுதான் வெளியே வாங்க பாத்துக்கலாம்”என்கிறார் கவின்.

தன் கடனை அடைக்கவே பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததாகச் சொல்லும் கவிண், போட்டியில் ஜெயித்து 50 லட்சத்தை வாங்கும் இலக்கை தன் நடவடிக்கை, செயல்பாடுகளால் 5 லட்சமாக குறைத்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :