டியூசனில் சிறுமியை கொடூரமாக தாக்கிய ஆசிரியை சொன்ன வாக்குமூலம்... தாக்கிய அன்று இரவு என்ன செய்தார் தெரியுமா? Description: டியூசனில் சிறுமியை கொடூரமாக தாக்கிய ஆசிரியை சொன்ன வாக்குமூலம்... தாக்கிய அன்று இரவு என்ன செய்தார் தெரியுமா?

டியூசனில் சிறுமியை கொடூரமாக தாக்கிய ஆசிரியை சொன்ன வாக்குமூலம்... தாக்கிய அன்று இரவு என்ன செய்தார் தெரியுமா?


டியூசனில் சிறுமியை கொடூரமாக தாக்கிய ஆசிரியை சொன்ன வாக்குமூலம்... தாக்கிய அன்று இரவு என்ன செய்தார் தெரியுமா?

குமரி மாவட்டத்தில் மாணவி ஒருவரை டியூசன் ஆசிரியை தாக்கிய சம்பவம் சமூக வளைதலங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. முன்னதாக கருங்கல் அருகே உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் அந்த மாணவி தேர்வுக்கு பள்ளிக்கு சென்றபோது மயக்கம்வருவது போல் இருந்துள்ளார்.

அப்போது அவரை ஆசிரியர்கள் பார்த்தபோதுதான் அந்த மாணவிக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.

அப்போது தான் டியூசன் ஆசிரியை அப்படி தாக்கி இருந்தது தெரியவந்தது. இதில் மாணவியின் முதுகுப்பட்டை பட்டையாகவும், கையில் தலும்புகள் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதாவும் விசாரித்து வருகின்றார்.

டியூசன் ஆசிரியை ஹெசிமோல் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ‘’மாணவி குறைவான மதிப்பெண் பெற்றதால் அவரை கம்பு, கரண்டியால் அடித்துள்ளார். இது மாணவியின் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க அவர் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார். இதுகுறித்து அவரது பெற்றோரிடம் இரவு தன் வீட்டிலேயே தங்க வைத்து படிக்க வைத்துவிட்டு, காலையில் தானே பரீட்சைக்கு அனுப்புவதாக சொல்லியிருக்கிறார். ஜேசிமோளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :