கேஸ் சிலிண்டர் வாங்கும்போது இனி இதை பார்த்து வாங்குங்க... ! Description: கேஸ் சிலிண்டர் வாங்கும்போது இனி இதை பார்த்து வாங்குங்க... !

கேஸ் சிலிண்டர் வாங்கும்போது இனி இதை பார்த்து வாங்குங்க... !


கேஸ் சிலிண்டர் வாங்கும்போது இனி இதை பார்த்து வாங்குங்க... !

முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு விறகடுப்புகள்தான் இருந்தன. இப்போது எங்கும் கேஸ் சிலிண்டர் வந்துவிட்டது அதேநேரம் கேஸ் சிலிண்டர் குறித்த விழிப்புணர்வு இன்னும் கூட முழுமையாக ஏற்படவில்லை.

அதில் முக்கியமானது சிலிண்டர் கொண்டுவருபவர் கொண்டுவந்ததுமே வாங்கி வைத்துவிடுகிறோம். சிலிண்டரின் காலாவதி தேதியை கூட நாம் பார்ப்பதில்லை. காலியான சிலிண்டரிலும் கூட ஆபத்து இருக்கிறது.

சிலிண்டர் இரும்பினால் ஆன ஒரு உலோகம். பொதுவாகவே கந்தக அமிலத்தை ஊற்றினால் இரும்பு அரித்துப்போய்விடும். அதேதன்மை சமையல் எரிவாயுவுக்கும் உண்டு இதனால்தான் குறிப்பிட்ட இடைவெளியில் காலாவதியான சிலிண்டர் உருளையை உருக்கி அதை மறுசுழற்சி செய்கின்றனர் .

பொதுவாகவே ஒரு சிலிண்டர் உருளையின் பயன்பாட்டு கால அளவு பத்து ஆண்டுகள்தான். இதை நாம் எப்படி தெரிந்துகொள்வது? இதோ அதற்கான ஐடியா ...

சிலிண்டரில் மேற்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அதில் ஒரு கம்பியில் சிலிண்டரில் எடை அளவு இருக்கும். இன்னொரு கம்பியில் காலாவதி தேதி குறித்து சுருக்கமாக கூறி இருப்பார்கள். அதோடு ஒரு நம்பரும் இருக்கும்.

இருப்பார்கள். அதோடு ஒரு நம்பரும் இருக்கும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் A எனும் எழுத்து ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால அளவையும், B எனும் எழுத்து ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால அளவையும், C எனும் எழுத்து ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால அளவையும், D எனும் எழுத்து அக்டோபர் முதல் டிசம்பர் வரியிலான கால அளவையும் குறிக்கும்.

உதாரணமாக உங்கள் சிலிண்டரில் A17 என்று இருப்பின் அது காலாவதி ஆகும் மாதம் march 2017 என்பதாகும். A19 என்றிருப்பின் மார்ச் 2019 உடன் உங்கள் சிலிண்டர் காலாவதி ஆகிவிட்டது என்றர்த்தம்.

இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் வரும்போது காலாவதி தியதியை பார்த்து வாங்குங்கள். பெரும் விபத்துக்களை தவிர்த்திடுங்கள்...


நண்பர்களுடன் பகிர :