பள்ளி முடிந்து மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ..! Description: பள்ளி முடிந்து மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ..!

பள்ளி முடிந்து மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ..!


பள்ளி முடிந்து மாலை நேராக டியூஷனுக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ..!

என்னதான் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தாலும் டியூஷனுக்கு அனுப்பினால்தான் பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள் என்பது பெரும்பாலான பெற்றோரின் மனநிலை இங்கே டியூஷனுக்கு சென்ற ஒரு குழந்தைக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டடத்தில் உள்ள பெத்தேல் புரம் மெர்ணா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது தேர்வுக்கு சென்ற சிறுமி தனக்கு உடல் முழுவதும் வலிப்பதாக கூறி சோர்ந்து இருந்துள்ளது இதுகுறித்து ஆசிரிய ஆசிரியைகள் கேட்டபோது பயந்துபோய் முதலில் பதில் சொல்லவில்லை அவர்கள் தொடர்ந்து விசாரித்ததில் சிறுமியை அவரது டியூஷன் ஆசிரியை கடுமையாக தாக்கியது தெரியவந்தது.

சிறுமி கூறியதை அடுத்து அவரது உடலை பார்த்த ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தது இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அனுப்பி வரவழைத்தனர் இதில் மாணவியின் டியூஷன் ஆசிரியை அவரது தாயின் நெருங்கிய தோழியும் ஆவார்.

இதனால் மாணவியின் தாயும் அவரது தோழியும் (டியூஷன் ஆசிரியை ) சேர்ந்தே பள்ளிக்கு வந்தனர் பள்ளித்தரப்பில் நடத்திய விசாரணையில் இருவரும் கூறிய தவகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதாந்திர தேர்வுகளில் சிறுமி சில பாடங்களில் கொஞ்சம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் இதனால் நடந்துவரும் காலாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தன்மகள் முழுமதிப்பெண்கள் பெறவேண்டும் எனவும் அதற்காக என்ன செய்தாலும் பரவாயில்லை எனவும் சிறுமியின் தாயார் கூறியுள்ளார் அதனாலேயே டியூஷன் ஆசிரியை தாக்கியதாக தெரியவந்தது கல்வி முக்கியம்தான். அதைவிட பெற்ற பிள்ளைகள் நமக்கு முக்கியமல்லவா ?

மாணவியை கொடூரமாக தாக்கிய டியூஷன் ஆசிரியை மீதும் அதற்கு காரணமாக இருந்த சிறுமியின் தாயார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது


நண்பர்களுடன் பகிர :