பிக்பாஸ்க்கு குரல் கொடுப்பது நானா? அது இறைவன் கொடுத்த வரம்..! வலிமையான போட்டியாளர் யார் என மனம் திறந்த பிரபலம்..! Description: பிக்பாஸ்க்கு குரல் கொடுப்பது நானா? அது இறைவன் கொடுத்த வரம்..! வலிமையான போட்டியாளர் யார் என மனம் திறந்த பிரபலம்..!

பிக்பாஸ்க்கு குரல் கொடுப்பது நானா? அது இறைவன் கொடுத்த வரம்..! வலிமையான போட்டியாளர் யார் என மனம் திறந்த பிரபலம்..!


பிக்பாஸ்க்கு குரல் கொடுப்பது நானா? அது இறைவன் கொடுத்த வரம்..! வலிமையான போட்டியாளர் யார் என மனம் திறந்த பிரபலம்..!

தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பட்டிதொட்டியெங்கும் பெரும் ரசிகர்படை உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு எதிர்மனநிலையில் இருப்பவர்கள்கூட அந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிட்டுத்தான் விமர்சனம் செய்கின்றனர். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ்க்கு குரல் கொடுப்பவர் கோபிநாயர் என கடந்த இருசீசன்களாக வதந்தி பரவியது.

விஜய் தொலைக்காட்சியில் பொதுவாக குரல் கொடுக்கும் பிரபலமான கோபிநாயர் இதுகுறித்து சமீபத்தில் மனம் திறந்துள்ளார். அதில், ‘’பிக்பாஸ்க்கு சத்தியமாக நான் வாய்ஸ் கொடுக்கவில்லை. அங்கே வாய்ஸ் கொடுப்பது யாரென்றே தெரியாது. அவரை நான் பார்த்ததும் இல்லை. அவர் உருவம் வெளியே தெரிந்துவிட்டால் கர்ஜனை குரல் சாதாரண குரலாகிவிடும். அதனால் அவர் உருவத்தைக்காட்ட வாய்ப்பில்லை.

முந்தைய இருசீசன்களோடு ஒப்பிடும்போது இந்த சீசனில் அந்த குரல் கொஞ்சம் தளர்ந்துள்ளது. இன்னும் இருபதுநாள்கள் பிக்பாஸ் இருக்கிறது. அப்போது அந்த குரல் இன்னும் கம்பீரமாகும்.

காதல் மிகப் புனிதமான விசயம். அதை மற்றவர்கள் விமர்சிக்கும் விதமாக கவின் செய்யும் செயல்கள் வருத்தம் அளிக்கிறது. லாஸ்லியா இலங்கையில் இருந்து வந்து தைரியமாக ஆடுகிறார். ஆனால் அவர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்க வேண்டும். தர்ஷன் பிக்பாஸில் வலிமையான போட்டியாளர்”எனக் கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :