என் மேல உசுரையே வைச்சுருந்தா...கஷ்டகாலத்தில் துணை நின்னா! முதல் மனைவி குறித்து கண்ணீர்மல்ககூறிய பிரபல காமெடியன் மதுரை முத்து..! Description: என் மேல உசுரையே வைச்சுருந்தா...கஷ்டகாலத்தில் துணை நின்னா! முதல் மனைவி குறித்து கண்ணீர்மல்ககூறிய பிரபல காமெடியன் மதுரை முத்து..!

என் மேல உசுரையே வைச்சுருந்தா...கஷ்டகாலத்தில் துணை நின்னா! முதல் மனைவி குறித்து கண்ணீர்மல்ககூறிய பிரபல காமெடியன் மதுரை முத்து..!


என் மேல உசுரையே வைச்சுருந்தா...கஷ்டகாலத்தில் துணை நின்னா! முதல் மனைவி குறித்து கண்ணீர்மல்ககூறிய பிரபல காமெடியன் மதுரை முத்து..!

கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மதுரை முத்து. மதுரை ஸ்டைல் வட்டார வழக்கில் இவர் அள்ளிவிடும் காமெடிகள் ரொம்ப பிரபலம். தொடர்ந்து சன்டிவியிலும் ஒரு நகைச்சுவைத் தொடர் செய்து வரும் மதுரைமுத்துவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலைவிபத்தில் மரணம் அடைந்தார்.

அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்த மதுரை முத்து, சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன் முதல்மனைவி குறித்து உருக்கமான சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான், எனது முதல் மனைவியை பார்த்த பத்தாவது நிமிடத்திலேயே திருமணம் செய்து கொள்ளலாமா எனக்கேட்டேன். அதற்கு அவர் ஏற்கனவே என் குடும்பத்தில் நிறைய கஷ்டங்கள் இருக்கு. நீங்க வேற இப்படிச் சொல்லுறீங்களேன்னு சொன்னார்.

அவர் அப்படிச்சொல்லவும் ஒரு காரணம் இருந்தது. ஏன்னா, என் முதல்மனைவிக்கு ஏற்கனவே கல்யாணமாகி இருந்தது. அவரது கணவர், வேறு ஒரு பெண்ணோடு சென்றுவிட்டார். அப்போது அவரை, அவர் குழந்தையோடு ஏற்றுக்கொண்டேன். மேலும் நல்லநிலையில் இருக்கும் உங்கள் குடும்பம், குழந்தையோடு இருக்கும் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கேட்டார். இரண்டே மாதத்தில் திருமணம். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் சதுரகிரி யாத்திரைக்கு போனார். என்னை வாழ்வில் முன்னேற்ற அவர் ரொம்பவே மெனக்கெட்டார்.

வீட்டுப் பிரச்னைகள் எனக்குத் தெரியாமல் பார்த்துக்குவார். மதுரையிலேயே நீங்கள் தான் பெரிய வீடு கட்டணும்ன்னு சொல்லுவார். இப்படி என்னில் இரண்டறக் கலந்து பயணித்தவர் இப்போது இல்லை. அவரோடு வாழ்ந்த காலத்தில் ஒருவிபத்தில் சிக்கினேன். 12 தையல் போட்டார்கள். என்னைப் பார்க்க வந்தவர்கள் எல்லாம் நீ பலரையும் சிரிக்க வைச்சதால தான் உயிர் பிழைச்சன்னு சொன்னாங்க. அப்போ என் முதல் மனைவி என்னை காப்பாத்துனதுக்கு நன்றி சொல்லி கோயிலுக்கு மொட்டை போட்டு வந்துட்டாங்க. அவுங்க முடிதான் அழகு. அதையே எனக்காக துச்சமா தூக்கிப் போட்டாங்க.

அவளோட இறப்புசெய்தி வர்றப்போ நான் அமெரிக்காவில் இருந்தேன். ப்ரோகிராமுக்கு போயிருந்தேன். பாஸ்போட் ப்ராப்ளத்தால இரண்டுநாளு கழிச்சுதான் அவ உடம்பையே வந்து பார்த்தேன்.என் மேல் உசுரையே வைச்சுருந்தா..என் கஷ்டகாலத்தில் துணைநின்னா..நான் இப்போ வசதியா இருக்கும் போது அவ கூட இல்லை.”என வேதனைபொங்க தெரிவித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :