மணப்பெண்ணுக்கு இவ்வளவு பெரிய பிரச்னையா? திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீடு.. குடும்பத்தையே எதிர்த்து மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க..! Description: மணப்பெண்ணுக்கு இவ்வளவு பெரிய பிரச்னையா? திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீடு.. குடும்பத்தையே எதிர்த்து மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க..!

மணப்பெண்ணுக்கு இவ்வளவு பெரிய பிரச்னையா? திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீடு.. குடும்பத்தையே எதிர்த்து மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க..!


மணப்பெண்ணுக்கு இவ்வளவு பெரிய பிரச்னையா? திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீடு.. குடும்பத்தையே எதிர்த்து மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கும் மிகப்பெரிய வைபோகம் தான் திருமணம். அப்படியான திருமண வீட்டில் நடந்த ஒரு நிகழ்வுதான் இது.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்கும், ரோஜா பிரியாவுக்கும் இருவீட்டாரும் சேர்ந்துபேசி திருமணம் முடிவு செய்தனர். இங்குள்ள விநாயகர் கோயிலில் வைத்து திருமணம்நடப்பதாக இருந்தது. இந்நிலையில் முகூர்த்தத்துக்கு சிறிதுநேரமே இருந்த நிலையில் திடீரென மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இதில் மணப்பெண் வீட்டாரும், மாப்பிள்ளை ரவியும் அதிர்ச்சியடைந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் ஷ்டேசனிலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணப்பெண் ரோஜாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் திருமணம் செய்ய மறுக்கிறோம் என மாப்பிள்ளை வீட்டாரும், இந்த விவரத்தை முன்னரே தெரிவித்து இருந்ததாக பெண் வீட்டாரும் சொல்ல பிரச்னையில் தலையை பிய்த்துக் கொண்டனர் காக்கிகள்.

இந்நிலையில் ஒரு இளம் பெண் அதிலும் மனநலக் குறைபாடு உடைய பெண் பாதிக்கக்கூடாதென அவரை திருமணம் செய்ய மாப்பிள்ளை சம்மதித்தார். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்திலும் இதை அவர் எழுதிக்கொடுத்தார். ஒரு இளம்பெண் பாதிக்ககூடாதென தன் மொத்த குடும்ப எதிர்ப்பையும் மீறி மாப்பிள்ளை செய்த செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :