என்வாழ்க்கை படத்தில் சமந்தாவா..? அவரைவிட இந்த நடிகையே பொருத்தமாக இருப்பார்.. பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஓப்பன் டாக்...! Description: என்வாழ்க்கை படத்தில் சமந்தாவா..? அவரைவிட இந்த நடிகையே பொருத்தமாக இருப்பார்.. பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஓப்பன் டாக்...!

என்வாழ்க்கை படத்தில் சமந்தாவா..? அவரைவிட இந்த நடிகையே பொருத்தமாக இருப்பார்.. பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஓப்பன் டாக்...!


என்வாழ்க்கை படத்தில் சமந்தாவா..? அவரைவிட இந்த நடிகையே பொருத்தமாக இருப்பார்.. பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஓப்பன் டாக்...!

திரையுலகில் அவ்வப்போது பயோகிராபி படங்களும் வெளியாகி வருகிறது. இந்த படங்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் இருக்கிறது. அண்மையில் கூட சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மகாநடி என தெலுங்குப்படம் வந்தது. இந்த படம் நடிகையர் திலகம் என்னும் பெயரில் தமிழுக்கும் வந்தது. இந்த படத்தில் நடித்த கீர்த்திசுரேஷ்க்கு தேசிய விருதும் கிடைத்தது.

அந்த வரிசையில் இப்போது பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது. இந்திய பேட்மிண்டன் வீராங்கணையான இவர், சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் ஜப்பான் வீராங்கணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கம் வென்றார்.

அவரது வரலாற்றுப்படத்தில் சிந்துவாக நடிக்க சமந்தாவிடம் தயாரிப்பாளர்கள் பேச, சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் சிந்துவை சந்தித்த செய்தியாளர்கள், ‘உங்கள் வாழ்க்கை கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்?”எனக் கேட்க, எனது வாழ்வில் சமந்தாவை விடவும், தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

அதேநேரம் என் வேடத்தில் யார் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் என படக்கென ஓப்பன் டாக் விட்டுள்ளார் பி.வி.சிந்து.


நண்பர்களுடன் பகிர :