திருமணத்துக்கு சேர்த்து வைத்த காசில் இந்த மாப்பிள்ளை செஞ்ச வேலையை பாருங்க... நீங்களே இவர்களை வாழ்த்துவீர்கள்..! Description: திருமணத்துக்கு சேர்த்து வைத்த காசில் இந்த மாப்பிள்ளை செஞ்ச வேலையை பாருங்க... நீங்களே இவர்களை வாழ்த்துவீர்கள்..!

திருமணத்துக்கு சேர்த்து வைத்த காசில் இந்த மாப்பிள்ளை செஞ்ச வேலையை பாருங்க... நீங்களே இவர்களை வாழ்த்துவீர்கள்..!


திருமணத்துக்கு சேர்த்து வைத்த காசில் இந்த மாப்பிள்ளை செஞ்ச வேலையை பாருங்க... நீங்களே இவர்களை வாழ்த்துவீர்கள்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்நாளில் ஒரேஒருமுறை மட்டுமே நடக்கும் வைபோகம் தான் திருமணம். அதனால்தான் அதை மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். அதேநேரத்தில் இங்கு ஒரு மாப்பிள்ளை தன் திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த பணத்தில் செய்த ஒரு செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்று இருக்கிறது.

அப்படி அவர் என்ன செய்தார் என்றுதானே கேட்கிறீர்கள். மதுராந்தகத்தில் அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருப்பவர் விக்னேஷ்வரன். இவருக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே தன் திருமணச் செலவுக்காக கொஞ்சம், கொஞ்சமாக பணம் சேர்த்து வந்த விக்னேஷ்வரன் அந்த பணத்தை அதற்கு செலவு செய்யாமல் இன்னொரு விசயத்துக்கு செலவு செய்ய உள்ளூர் மக்களின் பாராட்டுமழையில் நனைந்து வருகிறார்.

திருமணம் என்பது ஒரே ஒருநாள் கூத்து. அதற்காக ஏன் ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டும் என முடிவெடுத்தவர் அதை மிகவும் சிக்கனமாக முடித்துக்கொண்டார். மீதி இருந்த பணத்தில் தன் பள்ளியின் கேட் பாழடைந்து இருந்ததால், 40 ஆயிரம் ரூபாய்க்கு அந்த அரசுப்பள்ளிக்கு புதிய இரும்புகேட் அமைத்தார். பள்ளியின் சேதமடைந்த சுற்றுச்சுவரை குறிப்பிட்ட தொகை ஒதுக்கி சீர்செய்தார்.

இதேபோல் தன் ஊரில் வேறுசில சமூக நல அமைப்புகளுடன் சேர்ந்து 25 ஆயிரம் விதைப்பந்துகளை வாங்கி வீசியிருக்கிறார். சுற்றுச்சூழல், ஏழைக்குழந்தைகளின் பள்ளியை பராமரித்தது என தன் திருமணப்பணத்தை ஆக்கப்பூர்வமாக செலவழித்த இவரை நீங்களும் வாழ்த்தலாமே ப்ரண்ட்ஸ்..


நண்பர்களுடன் பகிர :