நடிகர் சரவணனை கைவிட்ட பிக்பாஸ்... கைகொடுத்த தமிழக அரசு, எப்படித் தெரியுமா? கொண்டாட்டத்தில் சரவணன் ரசிகர்கள்..! Description: நடிகர் சரவணனை கைவிட்ட பிக்பாஸ்... கைகொடுத்த தமிழக அரசு, எப்படித் தெரியுமா? கொண்டாட்டத்தில் சரவணன் ரசிகர்கள்..!

நடிகர் சரவணனை கைவிட்ட பிக்பாஸ்... கைகொடுத்த தமிழக அரசு, எப்படித் தெரியுமா? கொண்டாட்டத்தில் சரவணன் ரசிகர்கள்..!


நடிகர் சரவணனை கைவிட்ட பிக்பாஸ்... கைகொடுத்த தமிழக அரசு, எப்படித் தெரியுமா? கொண்டாட்டத்தில் சரவணன் ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறு,விறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் அனைவரும் கவனிக்கத்தக்க நபராக இருந்தவர் சரவணன். பிக்பாஸ் இல்லத்தில் இவரைச்சுற்றி ஏராளமான சர்ச்சைகள் உலாவந்தது.

பெண்களை இடிப்பதற்காகவே சேலத்தில் பஸ்ஸில் போயிருக்கிறேன் என இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் கொடுத்த வாக்குமூலம் பெண்களை வீதியில் இறங்கி போராட வைத்தது. இதேபோல் இயக்குனர் சேரனை, சரவணன் ஒருமையில் பேசியது இயக்குனர்கள் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.

இப்படியான தொடர்ச்சியான செயல்பாட்டால் தன் பேரை தானே டேமேஜ் செய்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரவோடு, இரவாக வெளியேற்றப்பட்டார் சரவணன்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் மீண்டும் மீடியா வெளிச்சத்துக்கு வரலாம் என கணக்குப் போட்டார் சரவணன். ஆனால் அது கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு பெரிய பதவி ஒன்றை கொடுத்து அழகு பார்த்துள்ளது தமிழக அரசு.

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நேரடித்தமிழ் படம் ஒன்றை தேர்ந்தெடுத்து, அந்த படத்துக்கு மானியமாக 7 லட்ச ரூபாய் வழங்குகிறது தமிழக அரசு. இந்த ஆண்டு அந்த விருதுக்கான படத்தை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்றிருக்கிறார் சரவணன். சில மாதங்களுக்கு முன்புதான் தமிழக் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் கரத்தால் இவருக்கு கலைமாமணி விருது கொடுத்தார் என்பது மிக முக்கிய விசயமாகும்.


நண்பர்களுடன் பகிர :