சீறிப்பாய்ந்த கார்... தவறி நடுக்காட்டில் விழுந்த குழந்தை கவனிக்காமல் வீட்டுக்குப்போன பெற்றோர்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா? Description: சீறிப்பாய்ந்த கார்... தவறி நடுக்காட்டில் விழுந்த குழந்தை கவனிக்காமல் வீட்டுக்குப்போன பெற்றோர்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

சீறிப்பாய்ந்த கார்... தவறி நடுக்காட்டில் விழுந்த குழந்தை கவனிக்காமல் வீட்டுக்குப்போன பெற்றோர்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா?


சீறிப்பாய்ந்த கார்... தவறி நடுக்காட்டில் விழுந்த குழந்தை கவனிக்காமல் வீட்டுக்குப்போன பெற்றோர்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

அதிவேகமாக சீறிப்பாய்ந்து சென்ற காரில் இருந்து குழந்தை தவறி விழுந்தது. இதை கவனிக்காமல் பெற்றோர் வாகனத்தை இயக்கிக் கொண்டு வீடு போய்விட்டார். நடுக்காட்டில் விழுந்த குழந்தை என்ன ஆனது? பத, பதக்க வைக்கும் இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேரளத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு குடும்பத்துடன் காரில் வந்தனர். ஒருவயது நிரம்பிய தனது மகளுக்கு மொட்டை போட்டுவிட்டு அவர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மூணாறு காட்டுப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, தாயின் மடியில் இருந்த குழந்தை மலை திருப்பத்தில் சென்றபோது ஜன்னல் வழியே வெளியே விழுந்தது. அப்போது தாய் அசந்து தூங்கிக் கொண்டிருந்ததால் இதனைக் கவனிக்கவில்லை.

குழந்தையின் தந்தையோ அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை காரை ஓட்டிப்போய் வீட்டில் சேர்ந்த பின்புதான் காரில் குழந்தை இல்லாதது தெரிய வந்தது. குழந்த விழுந்த இடம் அடர்த்தியான காட்டுப்பகுதி. அங்கு காட்டு விலங்குகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு இருந்தது.

அந்த சிசிடிவி கேமராவில் காரில் இருந்து விழுந்த குழந்தை தவழ்ந்து வருவதைப் பார்த்த போலீஸார் உடனே அந்த இடத்துக்குப் போய் குழந்தையை மீட்டனர். தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சியின் மூலம் காரை போலீஸார் அடையாளம் கண்டனர். இதனிடையே குழந்தையை தொலைத்துவிட்டு அதன் பெற்றோரும் இன்னொருபுறத்தில் தேடிக் கொண்டிருந்தனர். கடைசியில் போலீஸார் அவர்களை கண்டுபிடித்து குழந்தையை ஒப்படைத்தனர்


நண்பர்களுடன் பகிர :