தன் மகள் ஒரு அதிசயப்பிறவி... மகளின் மர்ம மரணப் பிண்ணனியில் ரகசியம் சொன்ன பாடகி சித்ரா..! Description: தன் மகள் ஒரு அதிசயப்பிறவி... மகளின் மர்ம மரணப் பிண்ணனியில் ரகசியம் சொன்ன பாடகி சித்ரா..!

தன் மகள் ஒரு அதிசயப்பிறவி... மகளின் மர்ம மரணப் பிண்ணனியில் ரகசியம் சொன்ன பாடகி சித்ரா..!


தன் மகள் ஒரு அதிசயப்பிறவி... மகளின் மர்ம மரணப் பிண்ணனியில் ரகசியம் சொன்ன பாடகி சித்ரா..!

சித்ராவின் காந்தக்குரலுக்கு தமிழகமே உடைந்து உருகும். அமர்க்களம் படத்தில் சொந்தக்குரலில் பாட ரொம்ப நாளா ஆசை என தலயின் மனைவி ஷாலினி பாடும் பாடலில் கூட குயில் பாட்டு சித்ரா என வார்த்தை வரும். அந்த அளவுக்கு சித்ராவின் குரலும், தமிழர்களின் இசையும் நெருங்கிய தொடர்புடையது.

சித்ராவுக்கு நீண்டகாலம் குழந்தை இல்லாமல் இருந்தது. அவர் தவமிருந்து பெற்ற குழந்தை வெளிநாட்டில் உயிர் இழந்தது. இப்போது அந்த மரணம் தொடர்பாக சித்ரா சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், குழந்தை இல்லாத வருத்தத்தை புட்டப்பர்த்தியில் உள்ள சாய்பாபாவிடம் சொன்னேன். அவர் அடுத்தமுறை நீ இங்கே வரும்போது குழந்தையோடு வருவாய் என்றார். அது நடந்தது.

என் மகள் நந்தனாவின் மரணமானது கிருஷ்ணரின் மறைவு நடந்த அதேநாளில் ஜலசமாதியாக என் மகளின் மரணம் நேர்ந்துள்ளது. நான் பாடியதிலேயே மஞ்சாடி என்னும் தொகுப்புதான் என்மகளுக்கு பேவரட். அதை காணொளியாகப் பார்ப்பதில் அவளுக்கு கொள்ளைப்பிரியம்.

அவள் இறந்த அன்று துபாய் ஹோட்டலில் மஞ்சாடி பாடல் காணொளியை என்மகள் விரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்துவிட்டே குளிக்கப்போனேன். ஆனால் என் மகள் ஏன் அப்போது நீச்சல்குளம் பற்றி சிந்திக்க வேண்டும். என் மகள் எப்போதும் ஒரு பொம்மை வைத்திருப்பார். அதுவும் அன்று இல்லை. எப்போதும் காலில் செறுப்போடு இருக்கும் என் மகள் அன்று அதையும் போடவில்லை. அது ஏன் எனவும் தெரியவில்லை.

எங்கள் குடியிருப்பின் கதவுகளை திறந்து சிறுமியால் எப்படி வெளியேற முடிந்தது? நீச்சல் குளத்தின் இரும்புகதவுகளை எப்படி திறக்கமுடிந்தது? இதற்கெல்லாம் இன்னும் விடையில்லை. போலீஸ் வந்துபார்த்த போது நீச்சல்குளத்தின் பக்கத்தில் வரை என் மகள் நந்தனாவின் காலடித்தடம் இருந்தது. போலீஸ் அதை பதிவு செய்தனர். இல்லைன்னா பெற்றோரான நாங்களே ஜெயிலுக்குப் போயிருப்போம். விசாரணை செய்த அதிகாரிகள் அந்த காலடித்தடத்தை வீடீயோவாக பதிவு செய்த பின் அந்த அடையாளங்களும் மாயமாகிவிட்டது. மொத்தத்தில் என் மகள் அதிசயப்பிறவி...”என பழைய விசயங்களை நினைவுகூறுகிறார் சித்ரா.


நண்பர்களுடன் பகிர :