வாழ்க்கையில் நான் செய்த செய்த பெரிய தப்பு இதுதான்... முதன் முதலாக மனம் திறந்த நடிகை ரேவதி..! Description: வாழ்க்கையில் நான் செய்த செய்த பெரிய தப்பு இதுதான்... முதன் முதலாக மனம் திறந்த நடிகை ரேவதி..!

வாழ்க்கையில் நான் செய்த செய்த பெரிய தப்பு இதுதான்... முதன் முதலாக மனம் திறந்த நடிகை ரேவதி..!


வாழ்க்கையில் நான் செய்த செய்த பெரிய தப்பு இதுதான்... முதன் முதலாக மனம் திறந்த நடிகை ரேவதி..!

நடிகை ரேவதி ஒருகாலத்தில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். ஒருசிறிய இடைவேளைக்கு பின்பு மீண்டும் குலேபகவாலி, ஜாக்பாட் என இறங்கி ஆடிவருகிறார். இப்போது அவர் முதன் முதலாக தான் வாழ்க்கையில் ஒரு பெரிய தவறு செய்திருப்பதாக வேதனையோடு சொன்னார். அவர் எதைச் சொல்கிறார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கிவரும் நடிகை ரேவதி இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியலிலும் நடித்து வருகிறார். திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நடிகை ரேவதி, அப்போதே திருமணமும் செய்தார். ஆனால் கணவரோடு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக விவாகரத்து வாங்கினார்.

தொடர்ந்து இப்போது நடித்துவரும் ரேவதி அண்மையில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். ‘’நான் 12ம் வகுப்பு முடிச்சுருந்த நேரம் இயக்குனர் பாரதிராஜா சார் மண்வாசனை படத்தில் நடிக்க என்னைக் கேட்டாரு. அப்போ எனக்கு வெறும் 16 வயதுதான். நான் நடிகையான்னு மிரண்டுபோய் வேணாம்ன்னு சொன்னேன். ஆனா என்னோட மாமாதான் சமாதானப்படுத்தி நடிக்க வைச்சாரு. ஆனா நான் எனக்கு நடிக்க வராதுன்னு தான் பாரதிராஜாசார்கிட்ட சொன்னேன்.

உடனே அவரு, நல்லதாப் போச்சு. உன்னை நடிக்கவைக்க வேண்டியது என்னோட பொறுப்புன்னு சொன்னாரு. வாழ்க்கை நான் செஞ்ச பெரிய தப்பு கல்யாணம் செஞ்சதுதான். அதில் கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால் என்னோட சினிமா பாதை வேறுமாதிரி இருந்துருக்கும். இன்னும் ஏராளமான நல்ல படங்களில் நடிச்சுருப்பேன். இப்போ மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சுருக்கு...”என நெகிழ்கிறார் ரேவதி.


நண்பர்களுடன் பகிர :