இதையெல்லாம் விடாவிட்டால் உயிரை விட வேண்டியதுதான்... சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும் செயல்கள் இவை...! Description: இதையெல்லாம் விடாவிட்டால் உயிரை விட வேண்டியதுதான்... சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும் செயல்கள் இவை...!

இதையெல்லாம் விடாவிட்டால் உயிரை விட வேண்டியதுதான்... சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும் செயல்கள் இவை...!


இதையெல்லாம் விடாவிட்டால் உயிரை விட வேண்டியதுதான்... சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும் செயல்கள் இவை...!

சிறுநீரகம் மனித உடலில் மிக முக்கிய உறுப்பு. இதில் உள்ள செல்கள் சிறுவடிப்பான்களாக செயல்படுகிறது. இவை ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கி சிறுநீருக்கு அனுப்பும். சிறுநீரகம் தினசரி 200 குவாட்ஸ்க்கும் அதிக ரத்தத்தை வடிகட்டி, கழிவுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது.

நம் முறைதவறிய உணவுக்கலாச்சாரம் சிறுநீரகத்துக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். அது அழுக்குகளை தேங்கச் செய்து சிறுநீரகத்தையும் பாழாக்கும் அபாயம் உண்டு. இனி சிறுநீரகத்துக்கு விரோதிகளையும், நாம் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் எனவும் பார்ப்போம்.

மது..

பெக்கில் குடித்தால் மருந்து...மக்கில் குடித்தால்/ விசம் தானே? அளவோடு என்றாவது மது அருந்துபவர்களுக்கு சிக்கல் இல்லை. அதனால் நீங்கள் குடிக்கு அடிமையாக இருந்தால் இந்த பழக்கத்தை உடனே விடுங்கள்.

உப்பு

உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க சோடியம் பயன்படுகிறது. அதே இந்த சோடியம் அளவுக்கு அதிகமானால் பாதிப்பை உருவாக்கும். அதிக அளவு உப்பு எடுத்துக்கொண்டால் இதய செயல்பாட்டை கட்டுப்படுத்த இரத்த ஓட்டத்திலுள்ள எலக்ட்ரோலைட்டுகளை நீக்க சிறுநீரகங்கள் தேக்கி வைக்கும். இதாஅல் சிறுநீரக அழித்தம் ஏற்படும். எனவே அதிக உப்பும் ஆபத்தே...

இதேபோல் காபி, டீயில் இருக்கும் காப்ஃபைன் சிறுநீரகங்களின் டாக்ஸின்களின் அளவை அதிகரிக்கும். இதை தவிர்க்க வேண்டும். இதேபோல் செயற்கை சுவையூட்டிகள் சிறுநீரக செயபாடில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக இயற்கையான தேன்,பனை வெல்லத்தை பயன்படுத்தலாம்.

பால் பொருட்களை அதிகம் சாப்பிட்டாலும் சிறுநீரகக் கல் ஏற்படும். சிறுநீரகத்தின் முக்கியச் செயல்பாட்டில் ஒன்று உடலில் நீர்சத்தின் அளவைப் பராமரிப்பது. சிறுநீரக நோய் இருந்தால் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாது, இதனால் ஹை பிபி ஏறொஅட்டு, காலப்போக்கில் இதயநோயும் ஏற்படும். இதனால் சிறுநீரக நோய் இருப்பவர்கள் போதிய அளவு தண்ணீர் மட்டுமே டாக்டர் அறிவுரைப்படி குடிக்க வேண்டும்.

மரபணுமாற்றப்பட்ட உணவுகளும் சிறுநீரகப் பிரச்னைக்கு காரணம் ஆகிறது. புகைப்பிடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் கூட்டும். அதனோடு சேர்ந்து நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பையும் உருவாக்கிவிடும். தாகம் எடுத்தால் தண்ணீர், இளநீர், இயற்க ஜீஸ்களைக் குடிக்கலாம். அதற்கு மாற்றாக கார்போனைட்டட் பானங்களை குடித்தாலும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டு.

இதில் எல்லாம் எச்சரிக்கையாக இருங்கள்...சிறுநீரக பாதிப்பை நெருங்கவிடாமல் தடுங்கள்!


நண்பர்களுடன் பகிர :