குளிப்பதில் இதையெல்லாம் கவனியுங்கள்... 75% நோய்களுக்கு காரணம் இதுதான்.. ஒரு எச்சரிக்கை பதிவு..! Description: குளிப்பதில் இதையெல்லாம் கவனியுங்கள்... 75% நோய்களுக்கு காரணம் இதுதான்.. ஒரு எச்சரிக்கை பதிவு..!

குளிப்பதில் இதையெல்லாம் கவனியுங்கள்... 75% நோய்களுக்கு காரணம் இதுதான்.. ஒரு எச்சரிக்கை பதிவு..!


குளிப்பதில் இதையெல்லாம் கவனியுங்கள்... 75% நோய்களுக்கு காரணம் இதுதான்.. ஒரு எச்சரிக்கை பதிவு..!

‘’கூழானாலும் குளித்துக்குடி’ என்பது பழமொழி. ஆனால் குளிப்பதில்கூட சில மிக முக்கியமான விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றாவிட்டால் குளிப்பதே நமக்கு எதிரியாக அமைந்துவிடும். எப்படி என்கிறீர்களா? இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மனிதர்களுக்கு உருவாகும் பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படையே உடல் சூடுதான். நாம் ராத்திரியில் தூங்கி, காலையில் கண் விழிக்கும் போது நம் உடலில் ஏராளமான வெப்பக் கழிவுகள் தேங்கி இருக்கும். இந்த வெப்பக்கழிவை நீக்கத்தான் குளிர்ந்தநீரில் குளிக்கிறோம்.

பொதுவாகவே இந்த ப்ராசஸ் முறையாக நடந்தால் தான் நம் குளியலே அர்த்தமுள்ளதாகும். அதற்கு வெந்நீரில் குளிக்கக்கூடாது. எண்ணெய் குளியல் என்றால் மட்டுமே மிதமான வெந்நீரை பயன்படுத்த வேண்டும். அதேபோல் குளிர்ந்த நீரை அப்படியே எடுத்து தலையில் ஊற்றுவதும் தவறு. முதலில் தண்ணீரை காலில் ஊற்றினால் தான் வெப்பம் கீழே இருந்து மேலே எழும்பி கண், காது வழியாக வெளியேறும். நேரடியாக தலையில் ஊற்றினால் இது நடக்காது.

இதனால் தான் நம் முன்னோர்கள் குளத்தில் குளிக்கும்போது ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். இதில் காலில் தான் முதலில் தண்ணீர்படும் இதேபோல் குளத்தில் குளித்த முன்னோர்களை நினைவில் நிறுத்திப் பாருங்கள். உச்சத்தலையில் கொஞ்சம் தண்ணீரை தீர்த்தம்போல் தெளிப்பார்கள். காரணம், உச்சந்தலைக்கு அதிக சூடு ஏற்படக்கூடாது என்பதால் தான். இதனால் கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் கிரசை தாக்காமல் காது வழியாக போய் விடும்.

குளித்த பின் ஈரத்துணியோடு அரசமரத்தை சுற்றினால் அக்மார்க் சுத்தமான பிராண வாயுவை நம் உடல் தோல் வழியே எடுத்துக்கொள்ளும். சூரிய உதயத்துக்கு முன்னர் பச்சை தண்ணீரில் குளிப்பதே மிகவும் சிறந்தது.

குளிப்பது சுகாதாரத்தின் அடையாளம் மட்டுமல்ல...அது நம் ஆரோக்கியத்தின் அடித்தளமும் கூட!இனி குளிக்கும் போது இதையெல்லாம் கவனியுங்கள்..


நண்பர்களுடன் பகிர :