எம்.ஜி.ஆரின் வெள்ளைத்தொப்பிக்கு பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா? ஒரு சுவாரஸ்யப்பதிவு...! Description: எம்.ஜி.ஆரின் வெள்ளைத்தொப்பிக்கு பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா? ஒரு சுவாரஸ்யப்பதிவு...!

எம்.ஜி.ஆரின் வெள்ளைத்தொப்பிக்கு பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா? ஒரு சுவாரஸ்யப்பதிவு...!


எம்.ஜி.ஆரின் வெள்ளைத்தொப்பிக்கு பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா? ஒரு சுவாரஸ்யப்பதிவு...!

மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும். அது முடிந்த பின்னால் தான் என் மூச்சு நிற்கும் என கடமையை முன்னிலைப்படுத்தி இயங்கியவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவர் என்றும், பொன்மனச்செம்மல் என்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் கொடுத்து, கொடுத்து சிவந்தகரங்களுக்கு சொந்தக்காரர்.

அவர் எப்போதும் தலையில் வெண்மை நிற தொப்பி வைத்திருப்பார் நினைவில் இருக்கிறதா? சிறு பிராயம் தொட்டே தொப்பியையும், கண்ணாடியையும் தனது அடையாளமாக மாற்றினார். இனி இந்த தொப்பியின் பின்னால் உள்ள ரகசியத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆரம்பத்தில் திரைப்படங்களில் மட்டுமே தொப்பியுடன் தோன்றிவந்த எம்.ஜி.ஆரை நிஜத்திலும் தொப்பியை பயன்படுத்த வைத்தது அடிமைப்பெண் திரைப்படம் தான். ஒருநாள் சூட்டிங் ஸ்பாட்டில் வெயிலில் எம்.ஜி.ஆர் கஷ்டப்படுவதை படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க வந்த ரசிக கண்மணி ஒருவர் பார்த்திருக்கிறார். உடனே வெள்ளை நிற புஸ்குல்லா ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இந்த தொப்பி எம்.ஜி.ஆருக்கென்றே அளவெடுத்து செய்தது போலவும், அவரது தோற்றத்தை எடுப்பாக காட்டியதாகவும் பாராட்டுகள் குவிந்தது.

ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு தொப்பி மீதான பிரியம் அதிகரித்தது. எம்.ஜி.ஆருக்கு பிடித்துப்போன இந்த தொப்பியை தொப்பித் தயாரிப்பாளரான ரசாக் என்பவர் தயரித்து கொடுக்கத் துவங்கினார். எம்.ஜி.ஆர் மரணித்த போது இந்த வெள்ளை தொப்பியோடு தான் அடக்கம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் இறந்தவரை அந்த தொப்பியையும் ரசாக்கே செய்து கொடுத்தார். இப்படித்தான் எம்.ஜி.ஆரின் அடையாளமான வெள்ளை தொப்பியும் ஆனது


நண்பர்களுடன் பகிர :