உங்கள் இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாதீங்க..! Description: உங்கள் இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாதீங்க..!

உங்கள் இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாதீங்க..!


உங்கள் இதயம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா?  இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாதீங்க..!

இதயம் தான் ஒட்டுமொத்த மனித உடலையும் ஆரோக்கியமாக இயங்கவைக்கும் மையப்புள்ளி. உடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து நல்ல ரத்தமாக்கும் பெரும் பணியை செய்கிறது இதயம்.

இதயம் அமைப்பு எப்படி தெரியுமா?

நுரையீரலுக்கு பின்பக்கம் சுமார் அரைகிலோ அளவிலானது. இதில் நான்கு அறைகளும், அவற்றுக்கு இடையில் வாழ்வுகளும் உள்ளது. இதில் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள், கீழ் அறையின் பெர்யர் வெண்ட்ரிக்கிள். வலது அறையில் சுத்த ரத்தமும் இருக்கும்.

இதய நோய் நமக்கு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறிஅமுடியும். அவை குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தாடைப்பகுதியில் வலி, தோள்ப்பட்டையில் வலி, இடதுபுற மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது, முணுமுணுப்பு பிரச்னை, வயிற்று உப்பிசமும் சிலருக்கு ஏற்படும். இதயவாழ்வில் சீரான ரத்தப்போக்கு இல்லாததே இதற்கு காரணம். சிலருக்கு தைராய்டு சுரப்பி அதிகம் சுரக்கும். படபடப்பு, மயக்கம், உடல் தளர்ச்சியும் சிலருக்கு வரும்.

இது ஏன் வருகிறது?

புகைப்பழக்கம் இதயத்துக்கு அபாயம் தரும் ஒன்று. உடல் பருமனும், மோசமான உணவுப்பழக்கமும் அப்படியே!அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை, அதிக கொழுப்பு ஆகியவையும் இதயநோயின் நண்பன் என்றே சொல்லலாம்.

இதயநோயாளிகள் கத்திரிக்காய், முட்டைக்கோச், புடலங்காய், பீன்ஸ், பாகற்காய், காராமணி, காளிபிளவர், பீர்க்கங்காய், கொத்தவரங்காய், புதினா, கொத்தமல்லி, நூல்கோல், முருங்கைக்காய், கோவைக்காய், கறிவேப்பிலை, குடமிளகாய், வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், வாழைப்பூ, சாம்பல்பூசணி, தக்காளி, சவ்சவ், வெள்ளரிக்காய் மற்றும் கீரை வகைகளை உண்ணலாம். முளைகட்டிய பயிறு, தானிய வகைகளை சேர்ப்பது நல்லது. ஆனால் அசைவ உணவுகள் அதிகம் எடுக்கக்கூடாது.

வாரத்தில் 5 நாள்களாவது நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் வீதம் நடக்க வேண்டும். இரத்த அழுத்தம், சர்க்கரைநோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கனமான பொருளையும் தூக்கக்கூடாது.

சாக்லேட், ஐஸ்கிரீம். கேக், ஜெல்லி, இனிப்பு, பால்கோவா, மாட்டுறைச்சி, ஊறுகாய், கல்லீரல், மூளை, சாப்பிடக்கூடாது, அனைத்து கிழங்குவகைகளையும் தவிர்க்க வேண்டும் இதேபோல் ரத்த அழுத்தமும் இதயநோய்க்கு காரணம் இதனால் இரத்த அழுத்தத்தை க்ட்டுக்குள் வைக்க வேண்டும். இவர்கள் மறந்தும்கூட, அப்பளம், வடை, வற்றல், சிப்ஸ், பாப்கார்ன் பக்கம் திரும்பி விடக்கூடாது.

இதயநோய் ஆபத்தானதுதான். ஆனால் அதையும் கட்டுக்குள் வைத்து பழகிவிட்டால் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் தான்!


நண்பர்களுடன் பகிர :