ஏழுவயது சிறுமிக்கு நடந்த கொடுமை... இறந்த மகளை கையிலேயே தூக்கிச் சென்ற தந்தை, ஏன் தெரியுமா? Description: ஏழுவயது சிறுமிக்கு நடந்த கொடுமை... இறந்த மகளை கையிலேயே தூக்கிச் சென்ற தந்தை, ஏன் தெரியுமா?

ஏழுவயது சிறுமிக்கு நடந்த கொடுமை... இறந்த மகளை கையிலேயே தூக்கிச் சென்ற தந்தை, ஏன் தெரியுமா?


 ஏழுவயது சிறுமிக்கு நடந்த கொடுமை... இறந்த மகளை கையிலேயே தூக்கிச் சென்ற தந்தை, ஏன் தெரியுமா?

ஒருபக்கம் நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பி விட்டு காத்திருக்கும் நம் நாட்டில் ஒரு ஏழைச் சிறுமியின் உடலுக்கு ஆம்புலன்ஸ் கூட கிடைக்காமல் அவரது தந்தையே தூக்கிச்சென்ற அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விபரம் வருமாறு, ‘’சந்திரசேகரராவ் முதல்வராக இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில்தான் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள கரீம்நகர் மாவட்ட மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குனவரம் கிராமத்தை சேர்ந்த ஏழை தந்தை சம்பத்குமார், கரீம்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு தனது ஏழுவயது மகளை சிகிட்சைக்காக அழைத்துப் போனார்.

இங்கு சிகிட்சை பலனின்றி குழந்தை உயிர் இழந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோன சம்பத்குமார் மருத்துவமனை தரப்பிடம் தன் குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்ல அமரர் ஊர்தி சேவை, அல்லது ஆம்புலன்ஸ் சேவை செய்து கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை தரப்பு அதை செய்து கொடுக்கவில்லை.

தனது மகளின் சடலத்தை தனியார் ஆம்புலன்ஸில் வைத்து எடுத்துச் செல்லும் அளவுக்கு பொருளாதார பலம் இல்லாத சம்பத்குமார், கடைசியில் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன் கிராமத்தை நோக்கி, தன் கையில் குழந்தையை தூக்கியபடி அழுதுகொண்டே நடக்கத்துவங்கினார். இதைப் பார்த்த அந்தபகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன் ஆட்டோவில் குழந்தையை எடுத்துப் போய் சம்பத்குமார் வீட்டில் விட்டு உதவி செய்துள்ளார்.

ஆனால் மருத்துவமனை தரப்போ அவர் அவசரமாக செல்ல வேண்டும் என ஆம்புலன்ஸ் இல்லாமலே போய்விட்டார் என கூறியுள்ளது. விஞ்ஞானமும், பொருளாதாரமும் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த சூழலிலும் இப்படி கஷ்டப்படுபவர்களும் இருப்பது வேதனையான விசயம் தான்!


நண்பர்களுடன் பகிர :