சிக்கனால் வெளிவந்த சேரனின் நிஜமுகம்... வைரலாகும் வீடியோ Description: சிக்கனால் வெளிவந்த சேரனின் நிஜமுகம்... வைரலாகும் வீடியோ

சிக்கனால் வெளிவந்த சேரனின் நிஜமுகம்... வைரலாகும் வீடியோ


சிக்கனால் வெளிவந்த சேரனின் நிஜமுகம்... வைரலாகும் வீடியோ

இயக்குநர் சேரன் இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக தொடங்கிய தன் கலைப்பயணத்தில் இயக்குனராக பொற்காலம், பாண்டவர்பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்பட பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் சேரன்.

நாஞ்சில் நாடன் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை மையமாக வைத்து தங்கர்பச்சான் இயக்கிய ‘சொல்ல மறந்தகதை’ படத்திலும் ஹீரோவாக நடித்து அறிமுகமானவர். தொடர்ந்து ஹீரோ, குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இப்போது சேரனின் நிஜமுகம் என இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

‘’நேற்று லாஸ்லியாவிடம், சேரன் அப்பா நடிக்கிறார் என கவின் சொன்னபோது நீங்கள் ஏன் கோபப்படல?ன்னு கேட்கப்பட்டது. அதற்கு லாஸ்லியா, இல்ல நேத்துகூட சிக்கன் வந்த உடனே, அவரு என்னை சாப்டியான்னு ஒரு வார்த்தை கூட கேட்கலன்னு காரணமா சொல்லுவாங்க.

உண்மையிலேயே என்ன நடந்தது என ஒரு வீடீயோ சோசியல் மீடியாக்களில் வைரலாகிறது. அதில் என்ன நடந்துச்சுன்னு பார்த்தீங்கன்னா..’’சிக்கன் வந்த உடனேயே எல்லாருமே சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. ஆனால் சேரன் சாப்பிடவே மாட்டாரு. அவரு எல்லாருக்கும் சிக்கன் பீஸ் இருக்கான்னு கால்குலேட் பண்ணுவாரு. அப்போகூட எல்லாரும் ரெண்டு, ரெண்டு பீஸ் சாப்பிடுங்கன்னு அவருதான் முதல்ல சொல்லுவாரு. அப்போ லாஸ்லியா அவரு பக்கமா வந்துட்டு இருப்பாங்க.

அப்படி வந்துட்டு இருக்கும்போதுகூட, சேரன் நீ போய் ஒரு பிளேட்டை எடுத்துட்டு வான்னு சொல்லுவாரு. உடனே லாஸ்லியா, சரின்னு சொல்லிட்டுத்தான் பிளேட் எடுக்கப் போவாங்க. இது எல்லாமே கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் லாஸ்லியா சாப்டியான்னு ஒருவார்த்தைக்கூட சொல்லலன்னு சேரனை பிளேம் செய்வார். அதிலும் அவர் முதலில் சாப்பிட்டு விட்டதாக குறையாக சொல்லுவாங்க. சேரனின் இந்த பெருந்தன்மை முகம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :