தனியாக வசித்துவந்த குருக்கள்... பிச்சையெடுத்த பரிதாபம் இறப்புக்கு பின்பு அவர் வீட்டில் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? Description: தனியாக வசித்துவந்த குருக்கள்... பிச்சையெடுத்த பரிதாபம் இறப்புக்கு பின்பு அவர் வீட்டில் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா?

தனியாக வசித்துவந்த குருக்கள்... பிச்சையெடுத்த பரிதாபம் இறப்புக்கு பின்பு அவர் வீட்டில் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா?


தனியாக வசித்துவந்த குருக்கள்... பிச்சையெடுத்த பரிதாபம் இறப்புக்கு பின்பு அவர் வீட்டில் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா?

தனியாக வாழ்ந்து வந்த குருக்கள் ஒருவர் தன் வயோதிக காலத்தில் பிச்சை எடுத்து வாழ்வை ஓட்டி வந்தார். அவரது இறப்புக்கு பின்னர் அவர் வீட்டில் இருந்த பணம் அந்த பகுதிவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் டியுனி பகுதியை சேர்ந்த 70 வயதான பெரியவர் அப்பலா சுப்பிரமணியம். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். கோயிலில் குருக்களாக இருந்த சுப்பிரமணியத்தை மனைவியின் வறுமைக்குப் பிறகு தனிமை மிகவும் வாட்டியது. ஒருகட்டத்தில் அவருக்கு மனநோயும் ஏற்பட்டது. இதனிடையே சுப்பிரமணியத்தின் மகனும் அவரை விட்டுவிட்டு தன் பிள்ளைகள், மனைவியோடு வேறு இடத்துக்குப் போயிவிட்டார்.

இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த சுப்பிரமணியம் பிச்சை எடுத்து வாழ்வை நகர்த்தி வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்தார் சுப்பிரமணியம். இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே போய் பார்த்தபோது, அவர் வயோதிகம், நோயினால் உயிர் இழந்தது தெரிய வந்தது.

அப்போது வீட்டில் ஆங்காங்கே இருந்த பைகளை சோதித்துப் பார்த்ததில், நிறைய பணம் இருப்பதும் தெரிய வந்தது. இருநாள்கள் அதை அந்த பகுதி மக்கள் உட்கார்ந்து எண்ணினார்கள். அதில் 6 லட்ச ரூபாய் இருந்தது. இதனிடையே சுப்பிரமணியத்தின் மகனுக்கும் இந்த மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவரே தன் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தார்.

6 லட்ச ரூபாயை வீட்டில் வைத்து விட்டு மனநலம் பாதிக்கப்பட்டதால் அஞ்சுக்கும், பத்துக்கும் பிச்சை எடுத்து பெரியவர் ஒருவர் வயிறு நிறைத்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.


நண்பர்களுடன் பகிர :

V
Veera 10மாதத்திற்கு முன்
Antha kaasa kadal la podalum parava ella avar payan kitta kuduthurathiya