கவினின் அம்மா கைது செய்யப்பட்டதற்கு காய்த்ரி ரகுராம் ரியாக்‌ஷனை பாருங்க... சாக்‌ஷி அகர்வால் என்ன சொன்னார் தெரியுமா? Description: கவினின் அம்மா கைது செய்யப்பட்டதற்கு காய்த்ரி ரகுராம் ரியாக்‌ஷனை பாருங்க... சாக்‌ஷி அகர்வால் என்ன சொன்னார் தெரியுமா?

கவினின் அம்மா கைது செய்யப்பட்டதற்கு காய்த்ரி ரகுராம் ரியாக்‌ஷனை பாருங்க... சாக்‌ஷி அகர்வால் என்ன சொன்னார் தெரியுமா?


கவினின் அம்மா கைது செய்யப்பட்டதற்கு காய்த்ரி ரகுராம் ரியாக்‌ஷனை பாருங்க... சாக்‌ஷி அகர்வால் என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் மூன்று மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக இருக்கும் கவின், லாஸ்லியா, சாக்‌ஷி, அபிராமி என வரிசையாக பெண்களிடம் ஜொல்லு விட்டுவருவது பலரும் அறிந்ததே!

சட்டையை மாற்றுவது போல் பெண்களையும் நினைத்தாயா என சாக்சி அகர்வால் கவினை சாடி ஒரு வீடீயோவே வெளியிட்டு இருந்தார். ஏற்கனவே இப்படி கவினைச் சுற்றி பல சர்ச்சைகள் போன நிலையில் கூடுதலாக இன்னொரு சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார் கவின்.

கவினின் அம்மா உள்பட 3 பெண்கள் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்ததாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வந்தது. இந்த வழக்கின் இறிதி விசாரணை முடிந்து தீர்ப்பு வந்தது. இதில் கவினின் அம்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இதில் கவினின் அம்மா உள்பட அவர் குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் சிறைதண்டனை விதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கவின் தன் தாய் செய்த மோசடிக்காகவே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சனம் பறந்தது. இதற்கு பிரபல டான்ஸ் மாஸ்டரும், பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றவருமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர், ‘’இதுபோன்று பதிவிட்டு ஒருவரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம். கவின் வாழ்வில் முன்னேற நினைத்து கடுமையாக போராடிவரும் நபர்.

ஒருவரது சொந்த வாழ்வில் தலையிட வேண்டாம். வந்தாரை வாழவைக்கும் தமிழகமாக இல்லாமல் இங்கேயே பிறந்து வளர்ந்து வந்தவங்களையும் வாழவிடுங்கள். என பதிவிட்டுள்ளார். இதேபோல் பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்த சாக்‌ஷி, கவின் குடும்பத்தை யாரும் கலாய்க்காதீர்கள். அவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள் என ட்விட் செய்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :