கோயில் வாசலில் அனாதையாக இறந்துபோன பிச்சைக்காரர்... அவர் சேமித்துவைத்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா? Description: கோயில் வாசலில் அனாதையாக இறந்துபோன பிச்சைக்காரர்... அவர் சேமித்துவைத்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா?

கோயில் வாசலில் அனாதையாக இறந்துபோன பிச்சைக்காரர்... அவர் சேமித்துவைத்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா?


கோயில் வாசலில் அனாதையாக இறந்துபோன பிச்சைக்காரர்... அவர் சேமித்துவைத்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா?

கோயில் வாசலில் நீண்டகாலமாக இருந்து பிச்சையெடுத்து வந்த பெரியவர் ஒருவரின் சேமிப்பு காவல்துறையினரை மிரள வைத்திருக்கிறது.

ஆந்திராவின்,கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராஜமகேந்திரவரத்தில் பிரசித்து பெற்ற உமா மகேஸ்வரர் ஆலயம் உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த புண்ணிய தலத்தில் பலரும் வந்து நீராடி, தரிசிப்பது வழக்கம். இந்த கோயிலில் காஞ்சி நாகேஸ்வரராவ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார்.

அண்மையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவே சிலநாள்கள் பிச்சை எடுப்பதற்கு விடுமுறைவிட்டுவிட்டு சிகிட்சைக்கு பின்னர் ஓய்வில் இருந்தார். தொடர்ந்து மீண்டும் பிச்சை எடுக்கவந்தவர் உடல்நலமின்மையால் உயிர் இழந்தார். இதுதொடர்பாக அவரோடு சேர்ந்து பிச்சை எடுப்போரும், கோயில் பணியாளர்களும் போலீஸுக்கு தகவல் சொன்னார்கள்.

போலீஸார் அவரிடம் இருந்த பழைய அழுக்குத்துணி மூட்டைஐ பிரித்தபோது, அதில் 1,83,000 ரூபாய் பணம் இருந்தது. அதில் இருந்தே மூவாயிரம் ரூபாயை எடுத்து அவருக்கு அடக்கம் செய்ய செலவு செய்த போலீஸார் மீதிப்பணத்தை கோயில் மேலாளரிடம் ஒப்படைத்தார். அந்த பணத்தை கோயில் தர்மகாரியங்களுக்கும், அங்கு பிச்சை எடுப்போரின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :