நடிகை செளந்தர்யா கடைசியாக பேசியது இது தான்… மனம் வெதும்பி அழுத பிரபல இயக்குனர்...! Description: நடிகை செளந்தர்யா கடைசியாக பேசியது இது தான்… மனம் வெதும்பி அழுத பிரபல இயக்குனர்...!

நடிகை செளந்தர்யா கடைசியாக பேசியது இது தான்… மனம் வெதும்பி அழுத பிரபல இயக்குனர்...!


நடிகை செளந்தர்யா கடைசியாக பேசியது இது தான்… மனம் வெதும்பி அழுத பிரபல இயக்குனர்...!

மன்னிச்சுக்கோங்க...அவுங்க உங்க வீட்டு வேலைக்காரி இல்ல. என் வீட்டு எஜமானின்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணனிடம் பஞ்ச் வசனம் பேசுவார் நினைவில் இருக்கிறதா? சுத்தி, சுத்தி வந்தீங்க பாடலில் சூப்பர் ஸ்டாரையே சுற்றவிட்ட அழகுபதுமை செளந்தர்யா கடைசியாக தன்னிடம் பேசியது குறித்து பிரபல இயக்குநர் மனம் திறந்துள்ளார்.

நடிகை செளந்தயா தமிழ்த்திரையுலகில் 1993ம் ஆண்டு வெளியான பொன்னுமணி படத்தின் மூலமே அறிமுகம் ஆனார். இந்த படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்தான் செளந்தர்யாவை அறிமுகம் செய்தார். கடந்த 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தார். அதற்காக ஹெலிகாப்டரில் போனவர் ஹெலிகாப்டர் வெடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

சமீபத்தில் செளந்தர்யா பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.வி.உதயகுமார், ‘’பொன்னுமணி படத்தில் நடித்தபோதே சிரஞ்சீவி படத்திற்கும் அவரை சிபாரிசு செஞ்சேன். என் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்த செளந்தர்யா என்னை அண்ணா என்றுதான் கூப்பிடுவார். ஒருநாள் என்னை போனில் கூப்பிட்டு 2 மாதகர்ப்பமாக இருப்பதாக சொன்னார்.

இந்நிலையில் விமானம் வெடித்து அவர் இறந்த செய்தி அறிந்து துடித்துப் போனேன். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு போனபோதுதான் அவர் புதிதாக கட்டியிருக்கும் வீட்டைப் பார்த்தேன். அதில் என் புகைப்படத்தை பார்த்து கதறி அழுதுவிட்டேன்’ என சொன்னவர் அப்போதும் அழுதுவிட்டார்.


நண்பர்களுடன் பகிர :