நீச்சல்வீரர் குற்றாலீஸ்வரனுடன் தல அஜித் சந்திப்பு... குற்றாலீஸ்வரனின் நெகிழ்ச்சிப் பதிவு இதோ...! Description: நீச்சல்வீரர் குற்றாலீஸ்வரனுடன் தல அஜித் சந்திப்பு... குற்றாலீஸ்வரனின் நெகிழ்ச்சிப் பதிவு இதோ...!

நீச்சல்வீரர் குற்றாலீஸ்வரனுடன் தல அஜித் சந்திப்பு... குற்றாலீஸ்வரனின் நெகிழ்ச்சிப் பதிவு இதோ...!


நீச்சல்வீரர் குற்றாலீஸ்வரனுடன் தல அஜித் சந்திப்பு... குற்றாலீஸ்வரனின் நெகிழ்ச்சிப் பதிவு இதோ...!

தன் சிறுவனாக இருந்த பருவத்திலேயே நீச்சலில் அசுர சாதனை நிகழ்த்தியவர் குற்றாலீஸ்வரன். இவர் அண்மையில் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித்தை சந்தித்து பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர் குற்றால் ரமேஸ் என்னும் குற்றாலீஸ்வரன். இந்தியா சார்பில் சர்வதேச அளவில் பல போட்டிகளிலும் பங்குபெற்று பரிசு பெற்றார். இவரது திறனைப் பார்த்து இந்திய அரசு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கியது.

இந்நிலையில் தல அஜித்தை சந்தித்திருக்கிறார் குற்றாலீஸ்வரன். இதுகுறித்து அவர், ‘’இது நம்பமுடியாத மாலை. நான் உங்கள் பெரிய ரசிகன் என்று தல சொல்லும்போது, அந்த மனிதரின் எளிமை அரசரடித்து விட்டது. விளையாட்டு மேம்பாடு குறித்து ச்ல முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்து இருக்கிறோம்.” என தன் பேஸ்புக்கில் போட்டுள்ளார்.

அண்மையில் கோவையில் நடந்த துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து கொண்டார் தல. இதேபோல் ஹெலிகாப்டர் தயாரிப்பிலும் மாணவர்களோடு ஈடுபட்டார். இப்போது தலயின் கவனம் விளையாட்டுத்துறைப் பக்கம் திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :