81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு..! Description: 81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு..!

81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு..!


81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு..!

81 உயிர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து தன்னியிரை நீத்த சிறுமியின் செயல் பார்ப்போர் அனைவரையும் சோகத்தில் உறைய வைத்துள்ளது.

கலிபோர்னியா நாட்டை சேர்ந்த பத்துவயது சிறுமி பிரான்சின் கலாசர். தன் அம்மாவோடு பள்ளிக்கூடம் போய்த் திரும்பியவர் வழியில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக சாலையைக் கடந்து சென்றார். அப்போது கோரவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாள் பத்துவயது சிறுமி.

இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த சிறுமி கலிபோர்னியாவின் வேலி பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி நடந்த இந்த விபத்தில் சிறுமி மூளை சாவு நிலையை அடைந்தார். தொடர்ந்து பத்தாம் தேதி அவர் உயிரிழக்கவும் செய்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதனைத் தொடர்ந்து வேலி மருத்துவமனையின் ஊழியர்கள் சிறுமியின் உடலுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

சிறுமியின் மூளை, இதயம், கல்லீரல் உள்பட முக்கிய உறுப்புகள் ஆறு பேருக்கும், இதர உறுப்புகள்,ஆய்வுப் பணிகளில் 75 பேரும் என மொத்தம் 81 பேர் இதனால் பயன் பெற்று உள்ளனர். சிறுமியின் தாயார் என் குழந்தை எப்போதும் தன்னலம் அற்றவள் எனக் கூறியிருப்பதும் இப்பொழுது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :