பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவுக்கு என்னதான் நடந்தது? ஓப்பனாக பதில் சொன்ன அபிராமி...! Description: பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவுக்கு என்னதான் நடந்தது? ஓப்பனாக பதில் சொன்ன அபிராமி...!

பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவுக்கு என்னதான் நடந்தது? ஓப்பனாக பதில் சொன்ன அபிராமி...!


பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவுக்கு என்னதான் நடந்தது? ஓப்பனாக பதில் சொன்ன அபிராமி...!

பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்கொலைக்கு முயன்றதாக ஜாங்கிரி நகைச்சுவைப் புகழ் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த, அபிராமி மதுமிதாவுக்கு உண்மையில் பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடந்தது என மனம் திறந்துள்ளார்.

ஆரம்பத்தில் பொதுமக்கள், ரசிகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்றுவந்த அபிராமி, முகினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தார். பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியால் வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கு ஆண்கள் தான் காரணமென சமூகவளைதலங்களில் தீயாய் பரவியது.

இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அபிராமியிடம், ரசிகர் ஒருவர், ‘’மதுமிதா உங்களை சிறையில் போட்டதற்காகத்தான் ஆண்களுடன் சண்டை போட்டார். அவர் உங்களுக்காக போராடியபோது, அவருக்காக நீங்கள் தான் நிற்கவில்லை”என பேசினார். இதற்கு விளக்கமளித்த அபிராமி, ‘’மது ஒரு குழந்தை, அவர் சடக்கென உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

எதுவும் தெரியாமல் சொல்லாதீர்கள் என்று சொல்லியிருப்பதோடு, நான் தான் சேரன், கஸ்தூரியோடு அவரை கன்பெஷன் ரூமுக்கு அனுப்பிவைத்தேன். இங்கே அனைத்தையும் நான் கூறவில்லை. இது மிக சர்ச்சையான விசயம். அதைப்பற்றி பேசவேண்டாம். நாங்கள் யாரும் மதுவை காயப்படுத்தவில்லை”என கூறியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :