மூன்றே நிமிட நடிப்பு... பத்துகோடி சம்பளம்... வாய்ப்பை மறுத்த பிரபல திரைப்பட நடிகை... காரணம் இதுதான்! Description: மூன்றே நிமிட நடிப்பு... பத்துகோடி சம்பளம்... வாய்ப்பை மறுத்த பிரபல திரைப்பட நடிகை... காரணம் இதுதான்!

மூன்றே நிமிட நடிப்பு... பத்துகோடி சம்பளம்... வாய்ப்பை மறுத்த பிரபல திரைப்பட நடிகை... காரணம் இதுதான்!


மூன்றே நிமிட நடிப்பு... பத்துகோடி சம்பளம்... வாய்ப்பை மறுத்த பிரபல திரைப்பட நடிகை... காரணம் இதுதான்!

விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க பத்து கோடி ரூபாய் சம்பளம் என அந்த நிறுவனம் பேசியபோதும் கூட அந்த வாய்ப்பை பிரபல நடிகை ஒருவர் நிராகரித்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம் தானே?

மிஸ்டர் ரோமியோ படத்தை நினைவில் இருக்கிறதா? பிரபுதேவா பட்டையைக் கிளப்பி இருப்பார். அந்த படத்தில் பிரபுதேவாவோடு நடித்த ஷில்பா செட்டி தான் வாய்ப்பை மறுத்த பிரபலம். இவர் இளையதளபதி விஜயின் குஷி படத்திலும் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருப்பார். இந்தி, தெழுங்கு என பல மொழிகளிலும் நடித்த பெருமையும் இவருக்குண்டு. இவர் தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை கடந்த 2009ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இப்போது ஆண்குழந்தை ஒன்றும் உள்ளது.

ஷில்பா செட்டியிடம் அண்மையில் உடல் எடைக்குறைகும் மாத்திரைகள், பவுடர்கள் குறித்த விளம்பரத்தில் நடிக்க கேட்டு ஒரு நிறுவனம் பேசியது. மூன்றே நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த விளம்பரப்படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும் பேசியது சம்பந்தப்பட்ட நிறுவனம். ஆனால் ஷில்பா அதை உறுதியாக மறுத்துவிட்டார்.

ஏன் தெரியுமா? உடல் எடை குறைப்பது என்பது மனம் மற்றும் உடல்நலம் சம்பந்தமானது. முறையான உணவு உடல்பயிற்சி மட்டுமே உடல் எடை பிரச்னைக்கு தீர்வு. மாத்திரைகள் ஆரம்பத்தில் உடல் எடையை குறைத்து, பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என சமூக அக்கறையோடு வாய்ப்பை மறுத்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி .


நண்பர்களுடன் பகிர :