சூப்பர் ஸ்டாரை மிரளவைத்த நோய்... அறிகுறிகள் முதல் ஆபத்துவரை... எச்சரிக்கை ரிப்போர்ட்...! Description: சூப்பர் ஸ்டாரை மிரளவைத்த நோய்... அறிகுறிகள் முதல் ஆபத்துவரை... எச்சரிக்கை ரிப்போர்ட்...!

சூப்பர் ஸ்டாரை மிரளவைத்த நோய்... அறிகுறிகள் முதல் ஆபத்துவரை... எச்சரிக்கை ரிப்போர்ட்...!


சூப்பர் ஸ்டாரை மிரளவைத்த நோய்... அறிகுறிகள் முதல் ஆபத்துவரை... எச்சரிக்கை ரிப்போர்ட்...!

பாலிவிட்டின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் அமிதாப்பச்சன். இந்த வயதிலும் சினிமா, விளம்பரப்படங்கள் என அசத்தி வருபவர். அண்மையில் இவர் தவறான ரத்தம் செலுத்தியதால் தனது என்பது சதவிகித கல்லீரல் பாதிப்பு அடைந்துவிட்டதாகச் சொல்ல அவரது ரசிககண்மணிகள் மட்டுமல்லாது, நாடே அதிர்ச்சியடைந்தது. கூடவே அவர் தான் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தும், அது தனக்கு எட்டு ஆண்டுகளுக்கு பின்னரே தெரியவந்ததாகவும் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் ஓப்பனாக சொல்லியிருந்தார்.

இப்போது காசநோய் என்றால் என்ன? என்ற விவாதம் அவசியமாகிறது. mycobacterium tuberculosis என்னும் நுண்கிருமியே இதன் காரணம். சிறியவர் முதல் பெரியவர் வரை பாரபட்சமின்றி இது தாக்கும். இதனை டிபி என்கிறோம். இதன் அறிகுறிகளாவன...மூன்று வாரத்துக்கு மேல் நீடிக்கும் இருமல், சளி, சளியின் ரத்தம், பசியின்மை, உடல் எடை குறைவ்து, அதிகரிக்காமல் இருப்பது, களைப்பு, சுவாசிக்க சிரமப்படுதல் ஆகியனவாகும்.

இது நோயாளியின் மூக்கு, வாய்ப்பகுதியில் இருக்கும் நோய்க்கிருமி. நோயாளி அதைத்தொட்டுவிட்டு மற்றவரை தொட்டால் எளிதில் பரவிவிடும். இதேபோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் பயன்படுத்திய கர்சீப். உடை, சாப்பாட்டு பிளேட் போன்ற அவர் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்துவோரும் பாதிக்கப்படுவார்கள். இவ்வளவு ஏன்? நோயாளி பேசினாலும் பரவும் அபாயம் உண்டு.

இந்த கிருமிகள் நுரையீரல், குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத்தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல். மூளை என பல உறுப்பையும் பாதிக்கும். காசநோய் முற்றியநிலையில் இருமலோடு இரத்தம் வரும். இது அதிகரிக்கும்போது மரணம்கூட வரலாம். காசநோய் சிகிட்சையை துவங்கியதும் சளிப்பரிசோதனை மூலம் நோய்கிருமியின் அதிகரிப்பு, குறைவு குறைத்து கண்காணிப்பார்கள்.

ஆரம்பநிலையில் கண்டறிந்தால் தொடர்ந்து ஆறுமாதங்கள் மாத்திரை, மருந்து எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். இடையே சிகிட்சையை விட்டால் அது எம்.டி.ஆர் காசநோய் எனப்படும் தீவிர காசநோயாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. இதன் பாதிப்பை நுண்ணுயிர் வளர்ப்பின் மூலம் தான் உறுதிப்படுத்த முடியும்.

சர்க்கரை நோயாளிகளை காசநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் அவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் சளியும், இருமலும் இருந்தால் உடனே பரிசோதித்து விடுங்களேன்...


நண்பர்களுடன் பகிர :