கொலையில் முடிந்த டிக்டாக் வீடியோ... மனைவியை கொலை செய்த கணவன்..ஏன் தெரியுமா? Description: கொலையில் முடிந்த டிக்டாக் வீடியோ... மனைவியை கொலை செய்த கணவன்..ஏன் தெரியுமா?

கொலையில் முடிந்த டிக்டாக் வீடியோ... மனைவியை கொலை செய்த கணவன்..ஏன் தெரியுமா?


கொலையில் முடிந்த டிக்டாக் வீடியோ... மனைவியை கொலை செய்த கணவன்..ஏன் தெரியுமா?

டிக்டாக் வீடியோவுக்காக ரிஸ்க் எடுக்கும் பலரைப் பார்த்திருப்போம். இங்கே ஒரு டிக்டாக் வீடியோ கொலையில் முடிந்திருக்கிறது.

கரூர் மாவட்டம், தாந்தோனிமலை பகுதியை சேர்ந்த தம்பதிகளான சிவசங்கரனுக்கும், சூரியகாந்திக்கும் திருமணம் முடிந்து 19 வருடங்கள் ஆகிறது. சூரியகாந்தி சோசியல் மீடியாக்களில் மிக ஆர்வமாக இயங்கி வருகிறார்.

அதிலும் டிக்டாக் வீடியோக்களில் அதிக ஆர்வம் கொண்ட சூரியகாந்தி, முசிறி பகுதியைச் சேர்ந்த சக்திவேலோடு சேர்ந்து அதிகமான விடீயோ வெளியிட்டார். இதனால் இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து கேள்விப்பட்ட சூரியகாந்தியின் கணவர், சிவசங்கரன் அவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கு இடையே வெடித்த சண்டை கொலையில் முடிந்தது. தொடர்ந்து உயிர் இழந்த சூரியகாந்தியை சாக்குப்பையில் கட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, பகுதியில் தூக்கி வீசிவிட்டு தன் மனைவியை காணவில்லை எனவும் சிவசங்கரன் நாடகம் ஆடியுள்ளார்.

போலீஸார் சூரியகாந்தியை தேடி வந்த நிலையில், அவரது செல்போன் வீட்டுப்பக்கத்திலேயே சுவிட்ச் ஆப் ஆகியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிவசங்கரன் மேல் போலீஸாரின் சந்தேகப்பார்வைப் பதிய, அனைத்தையும் கக்கி இருக்கிறார் சிவசங்கரன். ஆக, டிக்டாக் வீடியோ பழக்கம்..கொலைவரை இழுத்துப் போயுள்ளது.


நண்பர்களுடன் பகிர :