உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்... அப்படி என்ன கோபம் தெரியுமா? Description: உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்... அப்படி என்ன கோபம் தெரியுமா?

உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்... அப்படி என்ன கோபம் தெரியுமா?


உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்...   அப்படி என்ன கோபம் தெரியுமா?

நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியில் திரும்பிய திசையெல்லாம் அபிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் பரபரக்கிறது. ஆனால் அபியோ அதைக் கண்ணீர் மல்க படித்துக் கொண்டிருக்கிறார்.

அது எப்படி எனக் கேட்கிறிர்களா? திசையன்விளை வடக்குத்தெருவை சேர்ந்த அபியின் அம்மா அமராவதிதான் இப்படி போஸ்டர் ஒட்டி இருக்கிறார். இதைப் பார்த்து பதறிப்போன அபியின் கணவர் சந்தோஷ் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

போலீஸ் விசாரணையில் அபியின் அம்மாவான அமராவதி தான் ஏன் அவ்வாறு போஸ்டர் ஒட்டினேன் என மனம் திறந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், என் கணவர் பன்னீர்செல்வம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். நான் எனது மூன்று மகள்களையும் ரொம்ப சிரமப்பட்டுதான் வளர்த்து வருகிறேன். இதில் அபி இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்தாள்.

திடீரென சந்தோஷ் என்பவரை காதலிப்பதாக வந்து சொன்னாள். சந்தோஷ்க்கு நல்ல குணம் கிடையாது. மேலும் அவர் ஏற்கனவே திருமணம் முடித்தவர். இதனால் நான் அவளது எதிர்காலம் குறித்து யோசித்து மறுத்தேன். ஆனால் அபி என் பேச்சைக் கேட்காமல் அவனை கல்யாணம் செய்து கொண்டாள். அந்த கோபத்தில் இப்படி போஸ்டர் ஒட்டினேன் எனக் கூறியுள்ளார்.

போஸ்டரில் இருந்த அச்சு அடிக்கப்பட்ட இடத்துக்கு சந்தோஷ் போன் செய்து கேட்டதால் தான் அபியின் தாயே இந்த போஸ்டரை ஒட்டியது தெரிய வந்தது. போஸ்டர் அச்சகத்தில் தன் மகள் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார் அபியின் தாய்...

காதலை எதிர்ப்பது என முடிவெடுத்த தாய், அதற்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :