கண் எதிரே தோன்றிய மரணம்.. மயிரிழையில் உயிர் தப்பிய வாலிபர்.. சிசிடிவி-யில் பதிவான காட்சி..! Description: கண் எதிரே தோன்றிய மரணம்.. மயிரிழையில் உயிர் தப்பிய வாலிபர்.. சிசிடிவி-யில் பதிவான காட்சி..!

கண் எதிரே தோன்றிய மரணம்.. மயிரிழையில் உயிர் தப்பிய வாலிபர்.. சிசிடிவி-யில் பதிவான காட்சி..!


கண் எதிரே தோன்றிய மரணம்.. மயிரிழையில் உயிர் தப்பிய வாலிபர்.. சிசிடிவி-யில் பதிவான காட்சி..!

இயற்கையை மீறிய சக்தி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. இயற்கை எப்போது என்ன ஆபத்தைக் கொடுக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. அந்தவகையில் இங்கே வாலிபர் ஒருவர் ஒரு நொடியில் மரணத்தில் இருந்து உயிர் பிழைத்து இருக்கிறார்.

அமெரிக்காவில் இப்போது மிக மோசமான காலநிலை நிலவி வருகிறது. அங்குள்ள அட்ரியன் நகரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இப்படி மழை பெய்து கொண்டிருக்கும் போது ரோமலஸ் மெக்னீல் என்ற வாலிபர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்காக குடை பிடித்தபடி சென்றார்.

அப்போது அவருக்கு மிக அருகில் ஒரு மின்னல் தாக்கியது. ஆனால் என்ன நடக்கின்றது எனத் தெரியாமல் பதட்டத்தில் தான் பிடித்திருந்த குடையைத் தவற விடுகிறார் வாலிபர். மீண்டும் மீண்டும் சுதாகரித்துக்கொண்டு குடையை பிடித்தவாறு நடக்கத் துவங்குகிறார்.

இது அந்தபகுதியில் இருந்த ஒரு சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 12 பேர் மின்னல் தாக்கி உயிர் இழந்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :