4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்... உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்....! Description: 4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்... உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்....!

4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்... உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்....!


4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்...   உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்....!

குழந்தைப் பருவம் குதூகலமானது. அவர்கள் காசு, பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் இல்லை. அவர்களின் விருப்பமே மிட்டாய் சாப்பிடுவதுதான். அந்தவகையில் தன் குழந்தைக்கு வாங்கிக்கொடுத்த மிட்டாயே உயிரைப் பறித்து இருக்கிறது.





பெரம்பலூர் மாவட்டம் அன்னைநகரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி சசிதேவி. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ரெங்கநாதன் என்ற மகன் உள்ளார். தர்மராஜ் தனது மகனுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து 5 ரூபாய் கொடுத்து ஜெல்லி மிட்டாய் வாங்கிக் கொடுத்து உள்ளார்.





அதை சாப்பிட்ட சிறுவன் மயக்கம் அடைந்தான். உடனே பெற்றோர் சிறுவனை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்ட தகவலை சொல்ல தன் பையனின் மரணத்துக்கு ஜெல்லி மிட்டாயே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.





உணவுப் பாதுகாப்பு அதிகாரியான சொளமியாவோ, ஜெல்லி மிட்டாய் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். சிறுவனின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே கூடுதல் விபரங்கள் தெரிய வரும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு தான் இது!


நண்பர்களுடன் பகிர :