உடல் மெலிந்து நோஞ்சானாக நிற்கும் பெண் யானை.. உலகையே உலுக்கும் புகைப்படம்.. இந்த யானையின் சோகத்தைப் பாருங்க...! Description: உடல் மெலிந்து நோஞ்சானாக நிற்கும் பெண் யானை.. உலகையே உலுக்கும் புகைப்படம்.. இந்த யானையின் சோகத்தைப் பாருங்க...!

உடல் மெலிந்து நோஞ்சானாக நிற்கும் பெண் யானை.. உலகையே உலுக்கும் புகைப்படம்.. இந்த யானையின் சோகத்தைப் பாருங்க...!


உடல் மெலிந்து நோஞ்சானாக நிற்கும் பெண் யானை.. உலகையே உலுக்கும் புகைப்படம்.. இந்த யானையின் சோகத்தைப் பாருங்க...!

யானை என்றதுமே நமக்கெல்லாம் அதன் கம்பீரமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். யானை ஆடி அசைந்து வருவதே அத்தனை மகிழ்ச்சியை நமக்கு உருவாக்கும் ஆனால் அதே யானையை உடல்மெலிந்து எலும்பும், தோளுமாக பார்த்தால் நமக்கு எவ்வளவு சங்கடம் வரும்? அப்படித்தான் சங்கடத்தை தந்திருக்கிறது அந்த படம். அதுவும் உலகம் முழுவதும் உள்ள சூழல் ஆர்வலர்களை உலுக்கியுள்ளது.

இலங்கையில் கண்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஈசாலா பெரஹேரா என்னும் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த விழாவில் 50க்கும் அதிகமான யானைகளும், 200க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்றனர். இதில் டிக்கிரி என்னும் யானையும் கலந்து கொண்டது.

இந்த டிக்கிரி யானைக்கு 70 வயது ஆகிறது. இந்த யானையின் புகைப்படத்தை சேவ் எலிபெண்ட் என்னும் அமைப்பு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் யானை மிகவும் உடல் மெலிந்து எலும்பு, தோலுமாக பார்க்கவே பரிதாபகரமாக காட்சியளிக்கிறது.

அந்த படத்தைபோட்ட இந்த அமைப்பினர், ‘’டிக்கிரிக்கு உடல்நிலை சரியில்லை. ஆனால் திருவிழாவில் இதுவும் ஒரு யானையாக பங்கேற்று இருக்கிறது. திருவிழாவின் மாலை நேரத்தில் பேரணியோடு இணையும் டிக்கிரி, நள்ளிரவில் தான் தன் இடத்துக்கு போய்ச் சேர்கிறது. எலும்பும், தோலுமாக டிக்கிரியின் நிலை மிக மோசமாக உள்ளது.”என பதிவிட்டுள்ளனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூச்சல், புகை, பட்டாசு சப்தம் இடையே டிக்கிரியையும் அழைத்துச் சென்றுள்ளனர்.”என பதிவிட்டுள்ளனர்.

இது இப்போது யானையின் பரிதாபநிலையை பாருங்க என இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :