அம்மா, அப்பா வீட்டிலேயே இருந்தும் போராடி உயிரைவிட்ட குழந்தை... பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..! Description: அம்மா, அப்பா வீட்டிலேயே இருந்தும் போராடி உயிரைவிட்ட குழந்தை... பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..!

அம்மா, அப்பா வீட்டிலேயே இருந்தும் போராடி உயிரைவிட்ட குழந்தை... பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..!


அம்மா, அப்பா வீட்டிலேயே இருந்தும் போராடி உயிரைவிட்ட குழந்தை...  பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதிலும் 1 முதல் 2 வயது வரையிலான காலத்தில் குழந்தைகள் துரு,துருவென வரும். அந்த காலத்தில் அவர்களை மிகவும் கண்ணும், கருத்துமாக பார்க்க வேண்டும். அதை கொஞ்சம் தவறவிட்டாலும் ஆபத்தானதுதான்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஒன்றரை வயதில் அருண் என்ற மகன் உள்ளார். முருகன், தன்மகன் அருணை குளிப்பாட்ட பாத்ருமில் குளிப்பாட்ட தண்ணீர் நிறைந்து இருந்தார். அப்போது முருகனுக்கு திடீரென செல்போன் அடித்தது. உடனே குழந்தையை அப்படியே விட்டு,விட்டு செல்போனை எடுக்கப் போனார்.

அந்த நேரத்தில் பாத்ரூமில் தனியாக நின்ற குழந்தை பக்கெட் தண்ணீருக்குள் ஏற முயன்றது. அப்போது அந்த பக்கெட் தவறி விழுந்தது. இதில் அந்த குழந்தை நீரில் மூழ்கி மூச்சுதிணறல் ஏற்பட்டு தவித்தது. முருகன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாலும், அவர் மனைவி கிச்சனில் வேலை செய்துகொண்டு இருந்ததாலுரூமை குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லை.

நீண்டநேரமாக குழந்தையின் சப்தம் கேட்காத்தால் முருகன் பாத்ரூமை எட்டிப்பார்த்த போதுதான் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு தவிப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தையை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து மேல்சிகிட்சைக்காக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தது.

பெற்றோர்கள் எந்த அளவுக்கு குழந்தைகளை கண்ணும், கருத்துமாக பார்க்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகியுள்ளது


நண்பர்களுடன் பகிர :