சோகவீடாக மாறிய திருமண வீடு... தங்கையின் திருமணத்துக்கு ஆசை ஆசையாய் வந்த ராணுவவீரரின் பரிதாப நிலை..! Description: சோகவீடாக மாறிய திருமண வீடு... தங்கையின் திருமணத்துக்கு ஆசை ஆசையாய் வந்த ராணுவவீரரின் பரிதாப நிலை..!

சோகவீடாக மாறிய திருமண வீடு... தங்கையின் திருமணத்துக்கு ஆசை ஆசையாய் வந்த ராணுவவீரரின் பரிதாப நிலை..!


சோகவீடாக மாறிய திருமண வீடு...   தங்கையின் திருமணத்துக்கு ஆசை ஆசையாய் வந்த ராணுவவீரரின் பரிதாப நிலை..!

கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை புரட்டி எடுக்கிறது. பெருமழையின் சீற்றத்தால் வரலாறு காணாத அளவுக்கு உயிர், பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஒரு இராணுவ வீரரின் நிலை கேட்போரையே கலங்க வைக்கிறது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், கவளப்பாறையைச் சேர்ந்தவர் விஷ்ணு. ராணுவவீரரான இவர் மேற்குவங்க மாநிலத்தில் பணிசெய்து வருகிறார். இந்நிலையில் இவரது சகோதிரி ஜிஷ்னாவுக்கு வீட்டில் வரன்பேசி முடித்தார்கள். இதனைத்தொடர்ந்து தன் தங்கையின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்ய விஷ்ணு விடுப்பில் கேரளம் வந்தார்.

வந்த இடத்தில் பேரிடரில் சிக்கி தன் சொந்தமண் தவிப்பதைப் பார்த்தவர் மீட்பு பணியில் தன் நண்பர்கள் உடன்சேர்ந்து இறங்கினார். மீட்பு பணிகளில் மிகத்தீவிரம் காட்டியவர் இரவில் மட்டுமே தன் வீட்டுக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் இவர்கள் வீட்டிலும் தண்ணீர் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் மணப்பெண் ஜிஷ்னா, இராணுவ பணியாற்றி வருபவரும், மணப்பெண் சகோதருமான விஷ்ணு, அவரது தந்தை விஜயன், தாய் விஷ்வேஸ்வரி ஆகியோர் மாயமாகினர். இவர்களை தேடும்பணி தீவிரமாக நடந்துவரும் நிலையில் இதுவரை அவர்கள் மீட்கப்படவில்லை. விஷ்ணு வின் சகோதரர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு இருக்கிறார்.

கேரள வெள்ளத்தினால் திருமண வீடே சோக வீடாக மாறி நிற்கிறது.


நண்பர்களுடன் பகிர :