தொடரும் கேரளசோகம்... கடவுளின் தேசத்தில் கண்ணீர் மயம் பிஞ்சுகுழந்தையை நெஞ்சோடு அணைத்து உயிர்இழந்த தாய்..! Description: தொடரும் கேரளசோகம்... கடவுளின் தேசத்தில் கண்ணீர் மயம் பிஞ்சுகுழந்தையை நெஞ்சோடு அணைத்து உயிர்இழந்த தாய்..!

தொடரும் கேரளசோகம்... கடவுளின் தேசத்தில் கண்ணீர் மயம் பிஞ்சுகுழந்தையை நெஞ்சோடு அணைத்து உயிர்இழந்த தாய்..!


தொடரும் கேரளசோகம்... கடவுளின் தேசத்தில் கண்ணீர் மயம் பிஞ்சுகுழந்தையை நெஞ்சோடு அணைத்து உயிர்இழந்த தாய்..!

கேரளத்தில் மிகப்பெரிய அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதில் பல விலைமதிக்கமுடியாத உயிர்களும் கூட பிரிந்து போய்விட்டது. இந்நிலையில் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளத்தில் தன் மகனை மார்போடு இறுக்கி அணைத்தபடி தாய் ஒருவர் மரணித்த நிகழ்வு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளத்தில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 72 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். இதுவரை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 58! வயநாடு மிகக்கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டரை லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆங்காங்கே நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் மீட்புபணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மலப்புரத்தில் நடந்த மீட்புபணியின் போது, கீது என்ற 22 வயது பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது.

இது உச்சகட்ட சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் கீது, தனது ஒருவயது மகன் துருவனை நெஞ்சோடு அணைத்தபடியே உயிர் இழந்துள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக குழந்தையும் உயிர் பிழைக்கவில்லை. இவர்கள் வீட்டில் கீதுவின் கணவர் சரத் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :