ஆசையாய் வளர்த்த மரத்தை வெட்டாதீங்க... கதறி அழுத சிறுமி.. வைரல் வீடீயோவைப் பார்த்துட்டு முதல்வர் என்ன செஞ்சார் தெரியுமா? Description: ஆசையாய் வளர்த்த மரத்தை வெட்டாதீங்க... கதறி அழுத சிறுமி.. வைரல் வீடீயோவைப் பார்த்துட்டு முதல்வர் என்ன செஞ்சார் தெரியுமா?

ஆசையாய் வளர்த்த மரத்தை வெட்டாதீங்க... கதறி அழுத சிறுமி.. வைரல் வீடீயோவைப் பார்த்துட்டு முதல்வர் என்ன செஞ்சார் தெரியுமா?


ஆசையாய் வளர்த்த மரத்தை வெட்டாதீங்க... கதறி அழுத சிறுமி.. வைரல் வீடீயோவைப் பார்த்துட்டு முதல்வர் என்ன செஞ்சார் தெரியுமா?

சின்னக் குழந்தைகள் பொம்மை வாங்கிக் கேட்டும், மிட்டாய் வாங்கிக்கேட்டும் அழுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சுற்றுச்சூழலை காக்கும் மரத்தை வெட்டக்கூடாது என பத்துவயது சிறுமி ஒருவர் ஓவென்று அழுதிருக்கிறார். அதைப்பார்த்துவிட்டு அந்த மாநிலத்தின் முதல்வர் செய்த செயல் இன்னும் ஆச்சர்யமானது.

இந்திய திருநாட்டின் மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் காக்சிங் நகரைச் சேர்ந்தவர் இளங்பம் பிரேம்குமார். இவருக்கு இளங்பம் வேலடினாதேவி என பத்துவயதில் மகள் உள்ளார். அந்த குழந்தை தன் வீட்டுக்குப் பக்கத்தில் குல்முகர் மரக்கன்றை நட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசையாக வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சாலை விரிவாக்கப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக அந்த மரங்களை வெட்ட அதிகாரிகள் உத்தரவு போட்டனர். இதனைத் தொடர்ந்து பணியாளர்கள் அந்த மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து சிறுமி, மரங்களை ப்ளீஸ் வெட்டாதீங்க என கெஞ்சி கதறி அழுதார். இதை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துப்போட அது சமூகவலைதளத்தில் டிரெண்டானது.

அப்படி பல இடங்களுக்கும் சுற்றிய அந்த வீடியோவை மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பைரன்சிங் பார்த்தார். அவர் உடனே வேலண்டினாவை நேரில் அழைத்து சந்தித்தார். அப்போது சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளுக்கு சிறுமிக்கு 20 மரமும் கொடுத்து, அதை நட்டு பராமரிக்க இடமும் கொடுக்கச்சொல்லி உத்தரவிட்டார். தொடர்ந்து அந்த சிறுமியை மனிப்பூர் மாநிலத்தின் பசுமை தூதராகவும் நியமித்து விட்டார்.

இதன் மூலம் இனி மணிப்பூரில் சூழல் சார்ந்து மேற்கொள்ளப்படும் அரசு விழிப்புணர்வு விளம்பரங்களிலும் இந்த சிறுமியின் படம் இடம்பெறும்..

அட்ராசக்கை!


நண்பர்களுடன் பகிர :