வேலிக்குள் சிக்கி போராடிய குட்டி குரங்கு.. தாய்குரங்கிடம் சேர்ந்தது எப்படி? கோடி பேரை கண் கலங்க வைத்த காட்சி..! Description: வேலிக்குள் சிக்கி போராடிய குட்டி குரங்கு.. தாய்குரங்கிடம் சேர்ந்தது எப்படி? கோடி பேரை கண் கலங்க வைத்த காட்சி..!

வேலிக்குள் சிக்கி போராடிய குட்டி குரங்கு.. தாய்குரங்கிடம் சேர்ந்தது எப்படி? கோடி பேரை கண் கலங்க வைத்த காட்சி..!


வேலிக்குள் சிக்கி போராடிய குட்டி குரங்கு.. தாய்குரங்கிடம் சேர்ந்தது எப்படி? கோடி பேரை கண் கலங்க வைத்த காட்சி..!

குட்டி குரங்கு ஒன்று வேலிக்குள் சிக்கிக் கொள்ள அதை இளைஞர்கள் சேர்ந்து மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குரங்கு ஒன்றின் குட்டியானது தாய் குரங்கை பிரிந்து வயல் பகுதிக்குள் தனியாக நுழைய முயன்றது. அப்போது அங்கு இருந்த பொடி நைலான் வேலியில் அந்த குரங்குக் குட்டி சிக்கியது. இதைப் பார்த்த தாய் குரங்கு குட்டியை எப்படி மீட்பது என்றே தெரியாமல் தவித்தது.

அப்போது அந்த பகுதியில் வந்த இளைஞர்கள் சிலர் அந்த நைலான் வேலியை கத்தியால் லாவகமாக கட் செய்து குரங்கை மீட்டனர். அப்போது அதை தூரத்தில் இருந்து தாய் குரங்கு பார்த்துக் கொண்டே இருந்தது.

இளைஞர்கள் சேர்ந்து குட்டிக் குரங்கை மீட்டு அதை தாய் குரங்கின் பக்கத்தில் கொண்டுபோய் விட்டனர். தன் குட்டி ஓடிவருவதைப் பார்த்த தாய்குரங்கு எதிரே ஓடிவந்து குட்டிக் குரங்கை அள்ளி அணைத்துக் கொண்டு ஓடுகிறது.

மொத்த தாய்மையின் பாசத்தையும் காட்டும் இந்த வீடியோவை இதுவரை ஒன்றரை கோடிபேர் பார்த்திருக்கின்றனர். நீங்களும் பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :