அப்பாவின் சடலத்தின் முன் கல்யாணம் செய்துகொண்ட மகன்... நெஞ்சை உருகவைக்கும் காதல்கதை... ! Description: அப்பாவின் சடலத்தின் முன் கல்யாணம் செய்துகொண்ட மகன்... நெஞ்சை உருகவைக்கும் காதல்கதை... !

அப்பாவின் சடலத்தின் முன் கல்யாணம் செய்துகொண்ட மகன்... நெஞ்சை உருகவைக்கும் காதல்கதை... !


அப்பாவின் சடலத்தின் முன் கல்யாணம் செய்துகொண்ட மகன்...  நெஞ்சை உருகவைக்கும் காதல்கதை... !

தனது காதலியை இறந்து சடலமாகக் கிடந்த அப்பாவின் முன்பு செய்த மகன் உறவினர்கள் அனைவரையும் பாசத்தில் உருகவைத்து இருக்கிறார்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். விழுப்புரம் மாவட்டம் சிங்கனூரை சேர்ந்தவர் தெய்வமணி. இவருக்கு 27 வயதில் அலெக்சாண்டர் என்னும் மகன் இருக்கிறார்.

அலெக்சாண்டர் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் பணி செய்யும் ஜெகதீஸ்வரி மீது அலெக்சாண்டருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர்.

இருவரது மதங்களும் வேறாக இருந்தாலும் இருவீட்டிலும் காதலுக்கு மரியாதைக் கொடுத்து சம்மதித்தனர். அடுத்தமாதம் 2ம் தேதி மயிலை முருகன் கோயிலில் இவர்கள் திருமணம் நடப்பதாக இருந்தது.

இந்நிலையில் அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி உடல்நலமின்மையால் நேற்று திடீரென இறந்து போனார். காதலியின் மீது நேசமும், அப்பாவின் மீது மாறாத பாசமும் கொண்ட அலெக்சாண்டர் இதைப் பார்த்து நொறுங்கிப் போனார்.

தந்தையை நினைத்து கதறி அழுதவர் திடீரென தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அப்பாவின் உடலின் முன்பே திருமணம் செய்துகொள்ளும் தன் விருப்பத்தைச் சொன்னார். முதலில் அவரது உறவுகள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் அலெக்சாண்டரின் உறுதியைப் பார்த்துவிட்டு அவர்கள் சம்மதித்தனர்.

அலெக்சாண்டரின் பாசத்தைப் பார்த்துவிட்டு பெண் வீட்டாரும் சம்மதிக்க தன் தந்தையின் சடலத்தின் முன்பே, தந்தை சாட்சியாக திருமணம் செய்து கொண்டார்.


நண்பர்களுடன் பகிர :