11 வயது சிறுவனின் உயிரைப்பறித்த சாக்லேட்... வீட்டில் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுப்பவரா நீங்கள்? இதை முதலில் படியுங்கள்..! Description: 11 வயது சிறுவனின் உயிரைப்பறித்த சாக்லேட்... வீட்டில் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுப்பவரா நீங்கள்? இதை முதலில் படியுங்கள்..!

11 வயது சிறுவனின் உயிரைப்பறித்த சாக்லேட்... வீட்டில் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுப்பவரா நீங்கள்? இதை முதலில் படியுங்கள்..!


11 வயது சிறுவனின் உயிரைப்பறித்த சாக்லேட்... வீட்டில் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுப்பவரா நீங்கள்? இதை முதலில் படியுங்கள்..!

சின்னஞ் சிறு குழந்தைகள் சாக்லேட்டை பார்த்தவுடனேயே அதில் மோகம் கொண்டு வாங்கிக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் மீதான பிரியத்தால் அவர்கள் கேட்டதுமே வாங்கிக் கொடுக்கின்றனர். முன்பெல்லாம் தொடர்ச்சியாக சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகளை சூத்தைப் பல் பிரச்னை தான் தாக்கி வந்தது. இதோ இப்போது ஒரு குழந்தையின் உயிரையே பறித்திருக்கிறது சாக்லேட்.

லங்காஷயர் நகரின் பர்ன்லே பகுதியை சேர்ந்தவர் தாமஸ் பவுனால் பிளாக்பர்ன் கொரோனர். இவரது மகன் ரபிபவுனால். இந்த சிறுவனுக்கு 11 வயது ஆகிறது. இவனுக்கு சின்ன குழந்தைப் பருவம் தொட்டு இப்போதுவரை பால்பொருள்கள் என்றாலே அலர்ஜி இருந்துள்ளது. இதனாலேயே அவனுக்கு பால், பால்பொருள்களை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் சிறுவனின் தந்தை அவனுக்கு பால் சேர்க்கப்படாதது என நினைத்து மோரிசன்ஸ் சாக்லேட் ஒன்றை கொடுத்து இருக்கிறார். சிறுவன் அதில் நான்கு துண்டுகளை சாப்பிட்டுவிட்டு, ஒவ்வாமையால் கடும் அவதி அடைந்தான்.

இதனைத் தொடர்ந்து மகனை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் போய் சேர்த்தார். அங்கு சிகிட்சை பலனின்றி சாக்லேட் சாப்பிட்ட சிறுவன் இறந்து போனான். தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில் சிறுவன், சாக்லேட்டில் கலந்திருந்த anaphylaxis என்ற பொருளாலேயே மரணம் அடைந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிறுவனின் தந்தை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சாக்லேடில் பால் பொருள்கள் கலக்காதது என விளம்பரம் செய்திருந்தாலேயே மகனுக்கு கொடுத்ததாக கூறியிருக்கிறார். சாக்லேட் சிறுவனின் உயிரையே பறித்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :