கணவரை பயம்காட்ட மனைவி செய்த செயல்... உயிருக்கே உலைவைத்த பரிதாபம்... ஒரு எச்சரிக்கைப் பதிவு..! Description: கணவரை பயம்காட்ட மனைவி செய்த செயல்... உயிருக்கே உலைவைத்த பரிதாபம்... ஒரு எச்சரிக்கைப் பதிவு..!

கணவரை பயம்காட்ட மனைவி செய்த செயல்... உயிருக்கே உலைவைத்த பரிதாபம்... ஒரு எச்சரிக்கைப் பதிவு..!


கணவரை பயம்காட்ட மனைவி செய்த செயல்... உயிருக்கே உலைவைத்த பரிதாபம்... ஒரு எச்சரிக்கைப் பதிவு..!

கணவரை பயமுறுத்த வேண்டும் என விளையாட்டாக மனைவி செய்த ஒரு செயல் அவர் உயிரையே பறித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து மேலதிக விபரங்கள் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவர் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை கதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இந்த ஜோடி மதுரவாயலில் தனி வீடு எடுத்து தங்கினர்.

அண்மையில் உடல்நலமின்மையால் அனிதாவின் தந்தை இறந்து போனார். இதனால் தனிமையில் இருக்கும் தன் தாய்க்கு துணையாக அனிதா அவரோடு அவர் வீட்டில் வசித்து வந்தார். வினோத்குமார் அடிக்கடி குடித்துவிட்டு அனிதாவின் தாய் வீட்டிற்குப் போய் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி, மனவேதனையில் இருந்த அனிதா தன் கணவரை பயமுறுத்தி, திருத்தும் நோக்கத்தோடு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சிப்பதுபோல் நடித்துள்ளார்.

ஆனால் விளையாட்டாய் அனிதா செய்தது வினையானது. அனிதாவின் உடலில் தீப்பிடித்தது. அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அனிதா உடலில் பற்றிய தீயை அணைத்து அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்த்தனர். அவர் அங்கு ஒருவாரம் சிகிட்சை பெற்ற நிலையில் நேற்று சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தார். திருமணம் ஆகி ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில் அமுதா உயிர் இழந்ததால் இவ்விவகாரம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்துகிறார்.


நண்பர்களுடன் பகிர :