பிக்பாஸ் வீட்டில் இருந்து சித்தப்பு சரவணன் வெளியேற இதுதான் காரணமா? வெளிவந்த வீடியோ ஆதார தகவல்.! Description: பிக்பாஸ் வீட்டில் இருந்து சித்தப்பு சரவணன் வெளியேற இதுதான் காரணமா? வெளிவந்த வீடியோ ஆதார தகவல்.!

பிக்பாஸ் வீட்டில் இருந்து சித்தப்பு சரவணன் வெளியேற இதுதான் காரணமா? வெளிவந்த வீடியோ ஆதார தகவல்.!


பிக்பாஸ் வீட்டில் இருந்து சித்தப்பு சரவணன் வெளியேற இதுதான் காரணமா? வெளிவந்த வீடியோ ஆதார தகவல்.!

திரையுலகில் தனது இடத்தை நிலைநாட்ட நீண்டகாலமாக போராடிக் கொண்டிருப்பவர் சரவணன். ஹீரோவாக நடித்த போதும் கிடைக்காத பிரபலத்தனத்தை அவருக்கு பருத்தி வீரன் திரைப்படம் கொடுத்தது. அதனாலேயே சித்தப்பு சரவணன் என அழைக்கப்படுகிறார்.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டார் சரவணன். முதலில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல இமேஜ் இருந்தது. அதிலும் தனது காதல் மனைவியே தனக்கு குழந்தை இல்லாததால் இரண்டாம் திருமணம் செய்து வைத்ததாக சொன்னபோது அவரது இமேஜ் டாப் கியரில் சென்றது. ஆனால் அதை பிக்பாஸ் வீட்டில் இருந்த நாள்களில் அவரே கெடுத்து கொண்டார்.

அதிலும் குறிப்பாக வீட்டில் பேசிக் கொண்டு இருக்கும்போது தான் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்று இருப்பதாக பெருமையாகச் சொன்னார். மேலும் பல ஆண்கள் அதற்காகவே பேருந்தில் வருவதாகவும் சொன்னார். அந்த வார்த்தையின் வீரியத்தை அறியாமலே ஒளிபரப்பி இருக்கின்றனர். இது அப்படியே டிவியில் ஓட அதுஓட பெரும் பிரச்னையானது.

இதேபோல் பிரபல இயக்குநர் சேரனிடம் ஒரு விவாதத்தின் போது ஒருமையில் பேசியதோடு அப்படித்தாண்டா பேசுவேன் எனவும் அதை நியாயப்படுத்தினார். கடைசியில் சரவணனுக்கு கமலே வார இறுதியில் அறிவுரை சொன்னார்.

இதனிடையே இன்று பிக்பாஸ் சரவணனைக் கூப்பிட்டு ஆண்கள் பேருந்தில் தவறான நோக்கத்திலேயே பயணிப்பதால கருத்து எழுந்தது. அப்போது நீங்க உங்கள் கைகளை உயர்த்தி அதை ஏற்றுக் கொண்டு உங்கள் அனுபவத்தை சொன்னீர்கள். இது வெளியில் விவாதம் ஆனதைத் தொடர்ந்து நீங்கள் மன்னிப்பு கேட்டீர்கள். ஆனால் பிக்பாஸ் அதை ஏற்கவில்லை. இதனால் நீங்கள் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுகிறீர்கள் எனச் சொல்ல சரவணனும் கண்வெசன் ரூம் வழியாக வெளியேறுகின்றார்.

இந்நிலையில் சிலவாரங்களுக்கு முன்னர் புதுயுகம் என்னும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த சரவணன் இதே தொனியில் நான் சிறுவயதில் நிறைய தவறுகள் செய்து இருக்கிறேன் என பட்டியல் போடுகிறார். அதே வீடியோ வில் மற்றவர்கள் இப்படி செய்யாதீர்கள் எனவும் சொல்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன் தெனாவெட்டு பேச்சும், இளமை பருவ ஒழுக்கம் இன்மையாலும் இந்த வயதில் அசிங்கப்பட்டு இருக்கிறார் சரவணன்....


நண்பர்களுடன் பகிர :