பாலை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் முறை சரியானது தானா? எவ்வளவு நேரம் வைக்கலாம்! அதை குடித்தால் என்னாகும்? தெளிவான விளக்கம் இதோ...! Description: பாலை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் முறை சரியானது தானா? எவ்வளவு நேரம் வைக்கலாம்! அதை குடித்தால் என்னாகும்? தெளிவான விளக்கம் இதோ...!

பாலை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் முறை சரியானது தானா? எவ்வளவு நேரம் வைக்கலாம்! அதை குடித்தால் என்னாகும்? தெளிவான விளக்கம் இதோ...!


பாலை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் முறை சரியானது தானா?   எவ்வளவு நேரம் வைக்கலாம்! அதை குடித்தால் என்னாகும்? தெளிவான விளக்கம் இதோ...!

பால் மிகச்சிறப்பான சத்துணவுப் பொருள். பாலில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் தான் வயோதிகர்களும் அதைக்குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நம்மவர்கள் பாலை வாங்கி ப்ரிட்ஜில் வைத்து குடிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அப்படி வைக்கலாமா? வைத்தால் அதை எவ்வளவு நேரம் வரை வைத்து குடிக்கலாம்? ப்ரிட்ஜில் வைத்து குடிப்பதால் தீமையா எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பாலில் கால்சியம் தொடங்கி ஏராளமான சத்துகள் இருக்கின்றன. இந்த உலகில் ஒரு மனிதன் பிறந்தவுடன் அவனுக்கு கொடுக்கப்படும் முதல் உணவே பால்தான். அதிலும் தாய்ப்பாலுக்கு ஈடு உலகில் எதிலுமே இல்லை. மகாத்மா காந்தியடிகளின் அன்றாட உணவில் கூட பாலுக்கும், நிலக்கடலைக்கும் முக்கியத்துவம் இருந்தது.

முன்பெல்லால் வீட்டுக்கு, வீடு பசுமாடு இருந்தது. அதன் மூலம் பால்வளர்ப்பு பிரபல்யமானது. ஆனால் இப்போது பாக்கெட் பால் நுகர்வு கலாச்சாரத்துக்குள் வந்துவிட்டோம். அதேநேரம் இந்த பாக்கெட் பாலை ப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாமா என்றும் ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. பாலை ப்ரிட்ஜிலோ, ப்ரீசரிலோ வைத்து அந்த பால் பாக்கெட் குறிப்பிடப்பட்டு இருக்கும் காலாவதி தேதிவரை குடிப்பதில் யாதொரு சிக்கலும் இல்லை.

ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்பதில் தான் விசயமே இருக்கிறது. பாலை உறைய வைக்கையில் அது விரிவடையும். அதனால் பாலை பாட்டிலில் ஊற்றி வைக்கும்போது அந்த பாட்டில் முழுவதும் ஊற்றாமல் முக்கால் பகுதி ஊற்றி உறைய வைக்கலாம். இதன் மூலம் பாட்டில் வெடிப்பதைத் தவிர்க்க முடியும். இதேபோல் உறைய வைத்த பாலை பயன்படுத்தும்முன், தண்ணீரில் கொஞ்சநேரம் எடுத்து வைத்துவிட்டு பின்னர் பயன்படுத்தலாம். அல்லது ப்ரீசரில் இருந்து ப்ரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு பயன்படுத்தலாம்.

பால் காலாவதி தேதியைக் கடக்காதவரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதில் தப்பே இல்லை...


நண்பர்களுடன் பகிர :