துபாயில் வேலை கிடைக்காமல் ஊருக்கு திரும்பியவர்... வாழ்க்கையையே திருப்பிப்போட்ட துபாய் பயணம்... இன்று கோடிகளுக்கும் அதிபதி! Description: துபாயில் வேலை கிடைக்காமல் ஊருக்கு திரும்பியவர்... வாழ்க்கையையே திருப்பிப்போட்ட துபாய் பயணம்... இன்று கோடிகளுக்கும் அதிபதி!

துபாயில் வேலை கிடைக்காமல் ஊருக்கு திரும்பியவர்... வாழ்க்கையையே திருப்பிப்போட்ட துபாய் பயணம்... இன்று கோடிகளுக்கும் அதிபதி!


துபாயில் வேலை கிடைக்காமல் ஊருக்கு திரும்பியவர்... வாழ்க்கையையே திருப்பிப்போட்ட துபாய் பயணம்... இன்று கோடிகளுக்கும் அதிபதி!

வேலை தேடி துபாய் போன மனிதருக்கு அங்கு எதிர்பார்த்துப் போன வேலை கிடைக்கவில்லை. அந்த கவலை தேய்ந்த முகத்தோடு ஊருக்கு வந்தால் துபாய் பயணத்தால் பலகோடிக்கு அதிபதி ஆகியிருக்கிறார். எப்படி என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

தெலுங்கானா மாநிலத்தின் ஜக்ரான்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விலாச் ரிக்காலா. துபாயில் ஓட்டுனராக இருந்தவர் அந்த வேலை பிடிக்காமல் வேறு வேலை தேடிக்கொண்டு இருந்தார். ஒருகட்டத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சொந்த ஊர் திரும்பிய விலாச் ரிக்காலா விவசாயம் செய்யத் துவங்கினார்

ஊருக்கு வருவதற்கு முன்னர் துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கான affle லாட்டரி சீட்டுக்களை வாங்கினார். இதேபோல் துபாய் ஷாப்பிங் ஸ்பெசல் லாட்டரி சீட்டு ஒன்றும் வாங்கினார். ஆனால் அந்த லாட்டரி சீட்டு வாங்கவும் கூட அவரிடம் பணம் இல்லை. இதற்காக அவர் தனது மனைவியிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில் ரிக்காலா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 4.08 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசுத்தொகை இந்திய மதிப்பில் 284,332,500 ரூபாய் ஆகும். ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய்க்கும் குறைவாக விவசாயம் மூலம் வருவாய் ஈட்டி வந்த இவரது குடும்பம் இதன்மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளது.

துபாயில் இருந்து வீட்டுக்கு வரக்கூட கையில் காசு இல்லை. லாட்டரி வாங்கும் என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு என் மனைவிதான் அவர் சேமிப்பில் இருந்து 20000 ரூபாய் அனுப்பி வைத்தார்” என்றார்.


நண்பர்களுடன் பகிர :