திருடப்போன இடத்தில் திருடன் செஞ்சு வைச்ச வேலையைப் பாருங்க... எழுதிவைச்ச கடிதம் இப்போ செம வைரல் ஆகுது! Description: திருடப்போன இடத்தில் திருடன் செஞ்சு வைச்ச வேலையைப் பாருங்க... எழுதிவைச்ச கடிதம் இப்போ செம வைரல் ஆகுது!

திருடப்போன இடத்தில் திருடன் செஞ்சு வைச்ச வேலையைப் பாருங்க... எழுதிவைச்ச கடிதம் இப்போ செம வைரல் ஆகுது!


திருடப்போன இடத்தில் திருடன் செஞ்சு வைச்ச வேலையைப் பாருங்க... எழுதிவைச்ச கடிதம் இப்போ செம வைரல் ஆகுது!

திருடர்களின் வாழ்க்கை அலாதியானது. கேரளத்தின் புகழ்பெற்ற முன்னாள் திருடர் மணியன்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு புத்தகமாகவே வந்து சக்கைப்போடு போட்டது. இங்கும் அப்படித்தான் ஒரு திருடனின் செயல் இணையத்தில் சகைப்போடு போட்டு வருகிறது. அவர் அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா?

கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகைக்கடை நடத்தி வருபவர் ஜெயராஜ். 65 வயதான இவர் நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போனார். நேற்று காலையில் வந்து கடையைத் திறந்தவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். கடையில் இருந்த பொருள்களும் சிதறிக் கிடந்தன.

ஜெயராஜ் கடையின் உள்ளே போய் பார்த்தபோது மேற்கூரையை உடைத்து திருடன் உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது. உள்ளே குதித்த திருடன் கல்லாப்பெட்டியில் கைவைத்தார். ஆனால் கல்லாவில் பணம் எதுவும் இல்லை. இதனால் ஏமாற்றத்தோடு சேர்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த திருடன், அந்த கடையில் இருந்த அனைத்து பொருள்களையும் சேதப்படுத்தி, பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களையெல்லாம் கிழித்து எறிந்தான்.

அத்தோடு அவன் மனம் ரிலாஸ்டாகவில்லை. கல்லாப் பெட்டியில் ஒரு கடிதமும் எழுதி வைத்திருக்கிறான். அதில், ‘’உயிரைப் பணயம் வைச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்ன ஏமாற்றலாமா? அதுக்குத்தான் இந்த குரங்குச்சேட்டை!” என எழுதி ஒட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

இந்த வாசகமும், ஒட்டிய எழுத்தும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :