ஆர்டர் செய்ததை டெலிவரி செய்ய இந்து பையனை கேட்ட கஸ்டமர்... ஜொமோடா நிறுவனம் சொன்ன பதில் தெரியுமா? Description: ஆர்டர் செய்ததை டெலிவரி செய்ய இந்து பையனை கேட்ட கஸ்டமர்... ஜொமோடா நிறுவனம் சொன்ன பதில் தெரியுமா?

ஆர்டர் செய்ததை டெலிவரி செய்ய இந்து பையனை கேட்ட கஸ்டமர்... ஜொமோடா நிறுவனம் சொன்ன பதில் தெரியுமா?


ஆர்டர் செய்ததை டெலிவரி செய்ய இந்து பையனை கேட்ட கஸ்டமர்... ஜொமோடா நிறுவனம் சொன்ன பதில் தெரியுமா?

வீட்டில் இருந்தபடியே நமக்குப் பிடித்த ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்து விட்டு ரிலாஸ்டாக இருந்தால் ஜொமோடா நிறுவனத்தினர் வீட்டுக்கு வந்தே டெலிவரி செய்கிறார்கள். முன்பெல்லாம் பெரு நகரங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை இப்போதெல்லாம் சின்ன, சின்ன நகரங்களுக்கும் கூட வந்துவிட்டது.

இந்நிலையில் இப்படி ஆர்டர் செய்த அமித் சுக்லா என்பவர், திடீரென தான் டெலிவரி எடுக்க மாட்டேன் என கூறினார். ஏன் தெரியுமா? அந்த நிறுவனம் தனது ஆர்டரை வழங்க இந்து அல்லாத வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை ஒதுக்கி இருந்தது. ஆனால் அமித் சுக்லாவுக்கு இந்து அல்லாத வேறு ஒருவருடன் இருந்து உணவை வாங்க விருப்பமில்லையாம்.

இதுபற்றி தனது ட்விடரிலும் இதுபற்றி எழுதி இருக்கிறார் அமித் சுக்லா. அதில், ‘’ஜொமோட்டாவில் என்னோட ஆர்டரை ரத்து செஞ்சாங்க. இந்து ஒருவரை சம்பளை செய்ய அனுப்பச் சொல்லிக் கேட்டேன். ஆனால் அவர்கள் வேறு ஒருவரை மாற்ற முடியாது. பணத்தையும் திருப்பித்தர முடியாது எனச் சொன்னார்க்ள். என்னை டெலிவரி எடுக்க நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு பணம் திருப்பி வேணாம். நீங்கள் என் ஆர்டரை ர்த்து செய்யுங்கள்.”எனச் சொல்லி ட்விட் செய்திருந்தார்.

இதற்கு பதில் ட்விட் டெய்த ஜொமோடோ நிறுவனம், ‘உணவுக்கு மதம் இல்லை. ஆனால் அதுவே ஒரு மதம்’ என பதில் கமெண்ட் இட்டிருக்கிறது. இது இணையத்தில் வைரலானது. மதவெறிக்கு எதிராக நின்ற ஜொமாடோ என நெட்டிசன்கள் கொண்டாடத் துவங்கி இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் பதில் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஜொமோடாவின் நிறுவனர் தீபீந்தர் கோயல், அவர் அதில், ‘’இந்தியாவின் யோசனை மற்றும் எங்கள் பெரும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் மதிப்புகளின் வழியில் வரும் எந்த வணிகத்தையும் இழக்க வருந்துவதில்லை” என போட்டுள்ளார்.

சபாஷ் போட வைக்கும் ட்வீட் தானே நண்பர்களே!


நண்பர்களுடன் பகிர :