அடடே நம்ம சீயான் விக்ரமின் தம்பியா இது.. முதல் முறையாக வெளியான புகைப்படம் இது…! Description: அடடே நம்ம சீயான் விக்ரமின் தம்பியா இது.. முதல் முறையாக வெளியான புகைப்படம் இது…!

அடடே நம்ம சீயான் விக்ரமின் தம்பியா இது.. முதல் முறையாக வெளியான புகைப்படம் இது…!


அடடே நம்ம சீயான் விக்ரமின் தம்பியா இது..  முதல் முறையாக வெளியான புகைப்படம் இது…!

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தைப் பிடிக்க நீண்ட காலமாக போராடி வந்தார் விக்ரம். பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் அவருக்கு ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுத்தது. அதிலிருந்து அவரும் சீயான் விக்ரம் ஆனார். இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம்.

அண்மையில் கமலின் தயாரிப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் ரிலீசானது. இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. இவரது மகனும் பாலா இயக்கத்தில் அறிமுகமாக படம் பாதி எடுக்கப்பட்ட நிலையில் பஞ்சாயத்து ஆகி, இயக்குனரை மாற்றிவிட்டு ரீசூட் நடப்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த கதைதான்.

இப்போது சீயான் குடும்பத்தில் இருந்து இன்னொருவர் நடிக்க வந்திருக்கிறார். விக்ரமின் உடன் பிறந்த சகோதரர் அரவிந்த் ஜான் தான் அது.

இருதயராஜ் இயக்க உள்ள ‘எப்போ கல்யாணம்” படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் சீயானின் தம்பி. இவரது படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :