பிக்பாஸில் புதிய சர்ச்சை... கவினை காதலிக்கத் துவங்கிவிட்டாரா லாஸ்லியா? அவரது மாற்றத்தை அவரே உளறிய தருணம்..! Description: பிக்பாஸில் புதிய சர்ச்சை... கவினை காதலிக்கத் துவங்கிவிட்டாரா லாஸ்லியா? அவரது மாற்றத்தை அவரே உளறிய தருணம்..!

பிக்பாஸில் புதிய சர்ச்சை... கவினை காதலிக்கத் துவங்கிவிட்டாரா லாஸ்லியா? அவரது மாற்றத்தை அவரே உளறிய தருணம்..!


பிக்பாஸில் புதிய சர்ச்சை... கவினை காதலிக்கத் துவங்கிவிட்டாரா லாஸ்லியா? அவரது மாற்றத்தை அவரே உளறிய தருணம்..!

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் உத்வேகத்தோடு போய்க் கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தில் இருப்பதில் அனைவருக்கும் பிடித்தவராக லாஸ்லியா இருக்கிறார். இப்போது அவரைச் சுற்றி புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அது என்ன என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முகேன், சாண்டியிடம் அபிராமி குறித்து பேசினார். அதில் அபிராமி தனக்கு வெளியே ஆள் இருப்பது தெரிந்தும் தன்னை விடாமல் பிடித்துக்கொண்டு அதே நினைப்புடன் தான் இருக்கிறார் என கூறினார்.

இதேபோல் அபிராமியிடம் பேசிய சாக்‌ஷி, ‘’அபி உன்னோட கவனம் முழுசும் முகேன் மீதுதான் இருக்கிறது. நீ எதுக்கு வந்துருக்க? நல்ல திறமையான முகேன் இப்போலாம் லாச்ட் பெஞ்ச்ல இருக்குறவன் மாதிரி ஆகிட்டான். கிரியேட்டிவ், நல்ல பாட்டுன்னு இருக்குறவன் இப்போ எல்லாம் தனியா எங்கேயோ தொலைஞ்சு போயிட்டான். நல்ல தோழியா இருந்து நீதான் அவனை வெளிக்கொண்டு வரணும்.”ன்னு சொன்னார்.

இதை அபிராமி அப்படியே முகேன் கவனத்துக்கு கொண்டு போனார். ‘’நீ நல்லா பண்ணு. அப்புறம் உன்னோட இந்த செயலுக்கு நான் தான் காரணம்ன்னு சிலர் நினைப்பாங்க. என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கு லாஸ்லியா வருகிறார். அவரிடமும் அதையே அபிராமி ரிப்பீட் செய்தார்.

அபிராமி லாஸ்லியாவிடம், ‘’தமிழ்நாட்டு ஆடியன்ச் கிடைக்குறது கஷ்டம். உனக்கு கிடைச்சுருக்கு. அதை நீ தக்கவைக்கணும். கொஞ்ச நாளா உன்னையும் காணோம்” என பெர்மார்ம்ஸை மனதில் வைத்துச் சொல்ல, அதற்கு லாஸ்லியா, ‘’எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. வந்துருவேன்” என சொன்னார்.

இதனால் லாஸ்லியா கவின் மீது காதல் வயப்பட்டு விட்டாரோ என ரசிகர்கள் நினைக்கத் துவங்கி இருக்கிறார்கள். இதற்கான விடை போக, போகத்தான் தெரியும்.


நண்பர்களுடன் பகிர :