அடிக்கடி இந்த ஒரு உணவை சாப்பிடுபவரா நீங்கள்? அதனால் ஏற்படும் உடல் அபாயங்களை தெரியுமா? எச்சரிக்கை ரிப்போர்ட்.. Description: அடிக்கடி இந்த ஒரு உணவை சாப்பிடுபவரா நீங்கள்? அதனால் ஏற்படும் உடல் அபாயங்களை தெரியுமா? எச்சரிக்கை ரிப்போர்ட்..

அடிக்கடி இந்த ஒரு உணவை சாப்பிடுபவரா நீங்கள்? அதனால் ஏற்படும் உடல் அபாயங்களை தெரியுமா? எச்சரிக்கை ரிப்போர்ட்..


அடிக்கடி இந்த ஒரு உணவை சாப்பிடுபவரா நீங்கள்? அதனால் ஏற்படும் உடல் அபாயங்களை தெரியுமா? எச்சரிக்கை ரிப்போர்ட்..

இன்று அனைவருமே பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் இருக்கிறோம். இது மிகவும் அவசரமான உலகம். இன்றைய சூழலில் எல்லா வீட்டிலும் அவசர உணவாக பிரட் வாங்கி வைத்திருக்கிறார்கள். மாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் செய்யப்படும் உணவுதான் பிரட்.இதன் அபாயங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வெளிநாட்டில் இருந்து வந்த உணவுக்கலாச்சாரமான பிரட் இப்போது நமது உணவுபோல் மாறிவிட்டது. ஏன் பிரட் அபாயகரமானது தெரியுமா? பிரட்டில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களோ, புரதங்களோ கடுகளவு கூட கிடையாது. அதேநேரம் கோதுமை பிரட், முழுதானிய பிரட்களில் கொஞ்சம் ஊட்டச்சத்து கிடைக்கும்.

அதேபோல் பிரட்டில் அதிக அளவு சோடியம் இருக்கிறது. இது இதயநோய், இரத்தஅழுத்தம் வரக்காரணம் ஆகிறது. பிரட்டை தினசரி சாப்பிடும் போது உடலில் உப்பின் அளவு கூடும். அதேபோல் பிரட்டில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையும் கணிசமாக கூடும். இதையெல்லாம் விட முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் இந்த பிரட்டில் கார்போஹைட்ரேட் அதிகம் இருந்தாலும், பிற ஊட்டச்சத்துகள் இல்லாததால் பசியும் அடங்காது. அதேபோல் நாம் அதிக அளவு கார்போஹைட்ரேட்டை சாப்பிடும் போது ப்ரைன் பாக் நோயையும் அது உருவாக்கும்.

இந்த நோயானாது மூளையின் அறிவாற்றல் சக்தியை குறைக்கும். அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீரற்ற நிலையில் உருவாக்கும். இதனால் நீரிழிவு, மாரடைப்பு என பல நோய்களுக்கும் வழிவகுக்கும்.

பிரட் சாப்பிடுவதை நிறுத்த முடியாது. ஆனாலும் குறைக்கலாமே நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :