மீரா ஒரு சைக்கோ! தனக்கு நடந்த அனுபவத்தில் இருந்து கருத்து சொன்ன பிரபல நடிகர்..!

பிக்பாஸ் சீசன் மூன்று விறு, விறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இப்போதைய நிலையில் அனைவருக்கும் பிடித்தவராக லாஸ்லியாவும், அனைவரும் வெறுக்கும் நபராக மீரா மிதுனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மீரா மிதுனை பற்றி அவரோடு ஜோடி நம்பர் 1ல் நடனமாடிய சைப் அலிகான் சில விசயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அவர் அதில் மீரா மிதுனை சைக்கோ என கூறியுள்ளார். மீரா, இப்போது சேரன் மீது வைக்கும் குற்றச்சாட்டை ஜோடி நம்பர் 1 ப்ரமோவின் போது என் மீது வைத்தார்.
அதைப் பார்த்தவர்களுக்கு நான் தான் தவறு செய்து விட்டேனோ என எண்ணும்படி அது இருந்தது. மீரா இன்னும் இருவாரங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்தால் நிகழ்ச்சியை நடத்தும் கமல்சாரே நிகழ்வை விட்டு வெளியே வந்துவிடுவார். அப்படி வந்ததும் அவர் சந்திக்கும் முதல்நபர் நானாகத்தான் இருப்பேன்.

எப்படிடா அந்த பெண்ணோடு டேன்ஸ் ஆடினாய் எனக் கேட்பார். சேரன் போன்ற ஆளுமையை எப்படி குறை சொல்ல முடிகிறது? அவரோடு இணைந்து படம் செய்ய, அவரோடு வேலை செய்ய பல பிரபலங்கள் காத்திருக்கிறார்கள்.”எனறு சொல்லி அதிரவைத்துள்ளார். கூடவே இன்னொரு தகவலையும் சொல்லி இருக்கிறார். இந்த மீராமிதுனின் இயற்பெயர் தமிழ்செல்வியாம்!